×
 

நிர்கதியான நீர் மேலாண்மை... இதுதான் தமிழக நிலைமை... நயினார் நாகேந்திரன் ஆவேசம்...!

நீர் நிலைகளை பராமரிப்போம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சற்று வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியலை வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார். வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சொன்னீர்களே செய்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பூங்கா, மருத்துவமனை போன்ற வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை என்றும் அவற்றை செய்தீர்களா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். 

தமிழகம் முழுவதிலும் நீர்நிலைகளில் பரவியுள்ள சீமைக் கருவேல மரங்களையும், ஆகாயத் தாமரைச் செடிகளையும் அகற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி எண் 49-ல் கூறியது போல செய்தீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தின் விவசாயத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பெய்யும் மழைநீரைச் சேகரித்து வைக்கும் மையங்களாகவும், மழைநீர் வெள்ளமாக மாறிவிடாதபடி தடுக்கும் மழைநீர் வடிகால்களாகவும் நமது நீர்நிலைகள் பெரும்பங்கு வகித்து வருவதாகவும் அவற்றை முறையாகத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டிய ஆளும் அரசோ, நமது நீர்நிலைகளை மொத்தமாகக் கைகழுவி விட்டுவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: வெறிநாய்க்கடி மையமாக மாறிய மதுரை... இது தான் அறிவாலய அரசியல்..! நயினார் விமர்சனம்..!

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நீர்நிலைகளை எல்லாம் சரியாகப் பராமரிப்போம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுப்பணித்துறையில் இருந்த நீர்வளத்துறையைத் தனித்துறையாகப் பிரித்தனர். ஆனால், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் தண்ணீரே தெரியாதளவு ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சீமைக் கருவேல மரங்களை அழித்துத் தமிழக மண் வளத்தைப் பாதுகாக்க ஏற்பாடு செய்யுங்கள் என உயர்நீதிமன்றமே பலமுறை கெடு விரித்துள்ளதாகவும், திமுக அரசின் நீர்வளத்துறையோ நீர்த்துப் போய்விட்டது என்றும் தமிழகத்தின் நீர் மேலாண்மை நிர்கதியற்றுக் கிடக்கிறது எனவும் தெரிவித்தார்.

திமுக அரசின் இந்த அலட்சியத்தால் தான், கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்கள் வெயிலில் கருகுவதும், வெள்ளத்தில் மூழ்கி முளைத்துப் போவதும், மக்கள் சுத்தமான குடிநீருக்காகத் திண்டாடுவதும் தொடர்வதாக நயினார் நாகேந்திரன் கூறினார். தொடர்கின்றன. நீரின்றி அமையாது உலகு என்பதை உலகிற்கு எடுத்துக் கூறிய நம் தமிழ் மக்களைத் தண்ணீருக்காக அல்லாட வைத்த ஆளும் அரசை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே, நமது நீர் நிலைகளின் தரம் மேம்படும் என்றும் சாடியுள்ளார். 

இதையும் படிங்க: மத்திய அரசை குறைச்சொல்லும் ஊழல் பெருச்சாளிகள்... திமுகவை விளாசிய நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share