×
 

#BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... கார் விபத்தில் ஒரு குடும்பமே காலி... தந்தை, தாய், மகன் பலி...!

நாமக்கல்லில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாமக்கல் அருகே  அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர் - நல்லிபாளையம் போலீசார் விசாரணை.

நாமக்கல் அருகே, நல்லிபாளையம் புறவழிச் சாலையில், இன்று (16.09.2026) அதிகாலை கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி மொலைப்பட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களது காரில், பெங்களூரில் இருந்து  சொந்த ஊரான கரூர் நோக்கிச் சென்றனர். அப்போது, திருச்செந்தூர் சென்று விட்டு பெங்களூர் நோக்கிச் திரும்பிச் சென்ற கார் ஒன்று,  எதிர்புறத்தில் சென்ற அவர்களின் கார் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், கரூர் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த காரை ஓட்டி வந்த கார்த்திக்குமார் (35), அவரது தந்தை செல்வராஜ்(60), தாய் காந்திமதி(55) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். எதிரே காரை ஓட்டி வந்த கிசான் கவுடா (19) என்பவர் படுகாயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வருகிறார். அந்த காரில் வந்த மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

திருச்செந்தூரில் இருந்து, பெங்களூர் நோக்கி திரும்பிச் சென்ற (தார்)ஜீப் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, சாலை பிரிப்பானை (Divider) உடைத்துக் கொண்டு சென்று, எதிரே கரூர் நோக்கி வந்த சிறிய கார் (Glanza) மீது, மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share