NASA உயரதிகாரிகளுக்கு ஆப்பு! 2000 பேர் சீட்டு கிழிஞ்சது..! செலவை குறைக்க ட்ரம்ப் திட்டம்!
நாசாவில் 2,000 மூத்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இது, நாசாவின் அறிவியல் பிரிவு நிதியை 53% குறைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக இரண்டாவது முறையாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். 2024 தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து, 277 எலக்டோரல் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்த பதவிக்காலத்தில், அவர் "மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்" (Make America Great Again) என்ற முழக்கத்துடன், பொருளாதார சீர்திருத்தங்கள், குடியேற்றக் கொள்கைகள், மற்றும் அரசு செலவு குறைப்பு ஆகியவற்றை முன்னெடுக்கிறார்.
அவர் பதவியேற்ற முதல் நாளில், குடியேற்றக் கட்டுப்பாடுகள், எல்லை பாதுகாப்பு, மற்றும் லேகன் ரைலி சட்டம் போன்றவற்றை உள்ளடக்கிய பல நிர்வாக உத்தரவுகளை வெளியிட்டார். இவை, அவரது முதல் பதவிக்காலத்தில் தொடங்கிய கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்தன. செலவு குறைப்பு திட்டங்கள்: ட்ரம்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, அரசு செலவுகளை குறைப்பது. 2025 பிப்ரவரியில், அவர் அரசு செலவு மற்றும் அதிகாரத்தை குறைப்பதற்காக "துறை ஆப் கவர்ன்மென்ட் எஃபிஷியன்ஸி" (Department of Government Efficiency - DOGE) என்ற முயற்சியை தொடங்கினார்.
இதை எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் வழிநடத்துவார்கள் என்றும் அறிவித்தார். பின்னர் இதில் இருந்து எலான் மஸ்க் கழண்டு கொண்டது தனிக்கதை. இந்த DOGE முயற்சி, தேவையற்ற ஒழுங்குமுறைகளை நீக்குவது, தகவல் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்துவது, மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025 ஜூன் 3 வரை, 107,000 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: குற்றவாளி நெதன்யாகுவை ஏன் அரஸ்ட் பண்ணல? இத்தாலி, பிரான்ஸ், கிரிஸ் நாடுகளுக்கு ஐ.நா நிருபர் கேள்வி..!
இதில் 58,500 உறுதிப்படுத்தப்பட்ட குறைப்புகள், 76,000 விருப்ப ஓய்வு வாங்குதல்கள், மற்றும் 149,000 திட்டமிடப்பட்ட குறைப்புகள் அடங்கும். இந்த நடவடிக்கைகள், 2.4 மில்லியன் அரசு ஊழியர்களில் 12% குறைப்பை உள்ளடக்கியது. DOGE கடந்த ஜனவரி 20ம் தேதி நிர்வாக உத்தரவு மூலம் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் அரசு செலவில் "பெரும் மோசடி மற்றும் விரயத்தை" குறைப்பதாகும். எலான் மஸ்க் இதன் முக்கிய ஆலோசகராக இருந்தார்.
DOGE, மெடிகேர் மற்றும் மெடிகைடு தவறான செலவுகளை குறைப்பதாக உறுதியளித்தாலும், இதன் மூலம் சேமிக்கப்பட்ட $160 பில்லியன், $36 டிரில்லியன் தேசிய கடனில் 0.5% மட்டுமே. இந்த முயற்சி, சிறு வணிகங்களுக்கு ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வந்து, பல நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது தான் நிதர்சனம்.
இந்த நிலையில் நேற்று நாசாவில் 2,000 மூத்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இது, நாசாவின் அறிவியல் பிரிவு நிதியை 53% குறைக்கும் ($24.8 பில்லியனில் இருந்து $18.8 பில்லியன்) ட்ரம்பின் 2026 நிதி ஆண்டு பட்ஜெட் முன்மொழிவின் ஒரு பகுதியாகும். இந்த குறைப்பு, புவி அறிவியல் மற்றும் செவ்வாய் மாதிரி திருப்பி அனுப்புதல் போன்ற திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருகிறது. இந்த நடவடிக்கை, நாசாவின் மன உறுதலை பாதித்து, அறிவியல் ஆராய்ச்சியை கடுமையாக பாதிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: மூன்றாம் தாரமாக விற்கப்பட்ட 6 வயது சிறுமி.. ஆப்கானில் நடைபெறும் அவலம்.. வாட்டும் வறுமை..!