பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!
நேபாளத்தில் உள்ள போதகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, 42 கிலோமீட்டர் சாலைகள், 35 பாலங்கள் மற்றும் ஏராளமான கட்டிடங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ள நிலையில், மழை காரணமாக இடையூறு ஏற்பட்டபோதும், காணாமல் போன 2,000-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் நான்காவது நாளாக நடைபெற்று வருகின்றன.
நேபாளத்தில் உள்ள போதகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, 42 கிலோமீட்டர் சாலைகள், 35 பாலங்கள் மற்றும் ஏராளமான கட்டிடங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தப் பேரழிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்கப்பட்ட சடலங்களைப் பாதுகாக்க மருத்துவமனைகளில் போதிய சவக்கிடங்குகள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. சடலங்களை உறவினர்கள் அடையாளம் கண்டு பெற்றுச் செல்லும் வரை அவற்றைப் பாதுகாக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதையும் படிங்க: நேபாள வெள்ளப்பெருக்கு..! தஞ்சையை சேர்ந்த 17 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை..! ஆட்சியர் பூங்கொடி அதிர்ச்சி தகவல்..!!
இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் சகதியில் சிக்கியவர்களை நேபாள ராணுவத்தினர் மீட்கும் காட்சிகள் வெளியாகி, நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன.
பெருவெள்ளத்தில் இருந்து இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சம் பேர் வீடுகளை இழந்து உணவின்றி தவித்து வருகின்றனர்.
மேலும், வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 320 இந்தியர்கள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், திடீர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் படைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒன்றிய அரசின் சார்பில் மூன்றாவது விமானத்தில் நிவாரணப் பொருட்களும், 11 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் காத்மாண்டுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அரசின் சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்பதற்கான குழுவும் காத்மாண்டு சென்றடைந்துள்ளது.
இதனிடையே, பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தின் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு சுமார் 48,000 கோடி ரூபாய் தேவை என அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அசையவே இல்லை! நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!