×
 

300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நேபாளத்தில் தங்கியிருந்தவர்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை காலை திடீரென பல அடி உயரத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியதாக கூறப்படுகிறது. திபெத் பகுதியில் இருந்து கீழ்நோக்கி வந்த இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலங்கள், கரையோர கட்டடங்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த பேரிடரில் நேபாளத்தின் ரசுவா, நுவாகாட், தாடிங் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தங்கியிருந்தவர்களை தொடர்புகொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?

இந்த நிலையில், நேபாளத்தில் தங்கியிருந்தவர்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

காணாமல் போனதாக கூறப்படும் இந்தியர்களை தொடர்புகொள்ளவும், அவர்களின் நிலையை கண்டறியவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வெளியான தகவல்களில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சுமார் 100 பேர் உயிரிழந்ததாகவும், 133 இந்தியர்கள் உட்பட சுமார் 750 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டது. காணாமல் போன இந்தியர்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சென்ற 37 பேரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனிடையே, போடே கோஷி ஆற்றின் வெள்ளப்பெருக்கால் நுவாகோட்டில் முக்கியமான சாலைப் பகுதிகளும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 42 கி.மீ. தொலைவிலான முக்கிய சாலை துண்டிக்கப்பட்டதுடன், பல கான்கிரீட் பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த பகுதிகளை தொடர்புகொள்வதிலும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் நிலை குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களை இந்திய அதிகாரிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share