×
 

அமெரிக்காவை சார்ந்திருப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்!! அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு? இஸ்ரேல் பிரதமர் காட்டம்!

''அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை'' என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்றும், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது இந்த கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது நெதன்யாகு இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஈரானை எதிர்கொள்ள இஸ்ரேல் தனது சொந்த ஆயுத உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அமெரிக்காவுடன் நீண்டகாலமாக நிலவும் நட்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அவர் பாராட்டியிருந்தாலும், அந்த சார்பை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தனது பாதுகாப்புக்காக சுயாதீன ஆயுத உற்பத்தி அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: லெபனான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 16 பேர் பலி!! நெதன்யாகு கொடுத்த வார்னிங்!

“நாம் நமது சொந்த ஆயுதங்களை தயாரிக்க வேண்டும். வெளிநாட்டு சார்பை குறைத்து, சுயமாக செயல்படக்கூடிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்” என நெதன்யாகு கூறியுள்ளார். இந்த கருத்து, இஸ்ரேல்–அமெரிக்கா பாதுகாப்பு உறவுகள் குறித்த புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மேலும், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை என்றும், தற்போதைய நிலை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், இஸ்ரேலின் பாதுகாப்பு தன்னிறைவு குறித்த நெதன்யாகுவின் கருத்துகள் சர்வதேச அளவில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவின் பங்கும் எதிர்காலத்தில் எப்படி மாறும் என்பது குறித்து உலக நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன.

இதையும் படிங்க: இஸ்ரேல் மீது அனுதாபப்படுவர் ட்ரம்ப் மட்டும்தான்! அவரையே பிரச்னையா பாக்காதீங்க! ஜே.டி.வான்ஸ் அதிருப்தி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share