மக்களே உஷார்... வங்கக்கடலில் அதிரடி மாற்றம்...அடுத்த 24 மணி நேரத்தில் வருகிறது அடுத்த ஆபத்து...!
தற்போது நிலவும் வழிமண்டல மேலடுக்க சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
தற்போது நிலவும் வழிமண்டல மேலடுக்க சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இன்று காலை 5:30 மணி நிலவரப்படி தொடர்ந்து அதே பகுதியில் நீட்டித்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கப்போகும் தரமான சம்பவம்...!
அதேபோல தற்போது ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கக்கூடிய நிலையில், மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்தில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அதிக மழைப்பொழிலை எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நேற்றைய வானிலை ஆய்வு மையம் அறிவித்தின்படி இன்றைய தினம் 11 மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுபெற்று தொடர்ந்து இன்று காலை 5:30 மணி நிலவரப்படி அதே பகுதி நீடித்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுபெறும் என கூறப்பட்டிருக்கிறது.
அதேபோல இலங்கையை ஒட்டி அடுத்த 24 மணி நேரத்தில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக வட கடலோரம் ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒட்டிருக்கக்கூடிய மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - சேலம் , கடலூர் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!