தீபாவளி முடியும் வரை போராட்டங்கள் இல்லை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அபிஜீத் திப்கே அறிவிப்பு!
தீபாவளி பண்டிகை முடியும் வரை சிஜேபி சார்பில் புதிய போராட்டங்கள் நடைபெறாது என்றும், பண்டிகைக்குப் பிறகு அறப்போராட்டம் தொடரும் என்றும் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை முடியும் வரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் புதிதாக எந்தவிதப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும், ஆதரவாளர்கள் பண்டிகைக் காலத்தைத் தங்களது குடும்பத்தினருடன் நிம்மதியாகக் கழிக்க வேண்டும் என்றும் சிஜேபி அமைப்பாளர் அபிஜித் தீப்கே வீடியோ அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து சிஜேபி அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே ஏற்பட்ட கைது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் எதிரொலிகளுக்குப் பிறகு, களப் போராட்டங்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் தற்போது தற்காலிக இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது
தீபாவளி பண்டிகை முடியும் வரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் எந்தப் புதிய போராட்டங்களும் நடத்தப்பட மாட்டாது. எங்களது அமைப்பின் தோழர்களும் ஆதரவாளர்களும் இந்தப் பண்டிகை நாட்களைத் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சியாகச் செலவிட வேண்டும்.
இதையும் படிங்க: ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!
இந்தத் தற்காலிக இடைவெளி ஒருபோதும் எங்களை பலவீனப்படுத்தாது. ஜனநாயக ரீதியாகவும், அமைதியான அகிம்சை வழியிலும் நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான அறப்போராட்டம் தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் முழு வீச்சில் தொடரும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிக ஒத்திவைப்பால், தலைநகர் டெல்லியில் நிலவி வந்த போராட்டச் சூழல் தற்காலிகமாகத் தணிந்துள்ளது.
இதையும் படிங்க: அத்துமீறல்..! வெடிக்கும் டெல்லி போராட்டம்.. CJP தலைவர்களுக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல்..!