#BREAKING சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!
சென்னையில் இன்றைய தினம் பள்ளிகள் வழங்கும்போது செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் என்பது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாவட்டத்தில் இன்று வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது. நேற்றைய தினம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இரவு முதல் மிதமான மழையே பதிவாகி வருவதால் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில் நேற்றைய தினம் பல்வேறு 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்திற்குள் வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா நோக்கி மேற்கு - வட மேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதலே மிதமான மழை மட்டுமே பெய்து வந்தது.
இதையும் படிங்க: எப்போது புயலாக மாறும்? இந்திய வானிலை ஆய்வு மையம் அதி முக்கிய தகவல்…!
இதனால் சென்னையில இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அந்தந்த மாவட்டங்கள் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறித்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்து வந்தக்கூடிய நிலையிலும் கூட பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது, பள்ளிகளை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் மழையின் நிலவரம் அறிந்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்றைய தினம் கனமழை வெளுத்து வாங்கியதோடு, பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியது. இதனால் நேற்றைய தினம் சென்னைக்கு விடுமுறை சென்னை உள்ளிட்ட பல்வேற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் சென்னையில பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திடீரென தலைகீழாக மாறிய நிலவரம்... இந்த மாவட்ட மக்களுக்கு வெளியானது பகிரங்க எச்சரிக்கை...!