×
 

நோபல் பரிசை பகிர முடியாது!! ட்ரம்புக்கு ஐஸ் வைத்த வெனிசுலா தலைவருக்கு எதிர்ப்பு!

''நோபல் பரிசு ஒருவருக்கு வழங்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அது அவருடையதுதான்' என இந்த பரிசைப் பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோவுக்கு நோபல் அமைப்பு பதிலளித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தன்னை புகழ்ந்து வரும் நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ அந்த பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்வதாக கூறியிருந்தார். இதற்கு நோபல் அமைப்பு இப்போது தெளிவான பதிலை அளித்துள்ளது.

கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை தான் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததால் தனக்கு நோபல் பரிசு தகுதியானவர் என்று கூறி வருகிறார். 

சில நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், “நான் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். என்னை விட யாராவது அதற்கு தகுதியானவர்கள் என்று நினைக்க முடியவில்லை” என்று பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒபாமா ஒண்ணுமே பண்ணல!! நான் 8 போரை நிறுத்தி இருக்கேன்! நோபலுக்கு என்னை விட தகுதியானவங்க யாரு?

இதற்கிடையே, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படைகளால் சிறைபிடிக்கப்பட்ட பிறகு, நோபல் பரிசாளரான மச்சாடோ “எனக்கு கிடைத்த நோபல் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு நோபல் அமைப்பு இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நோபல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோபல் பரிசு ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால், அது வாழ்நாள் முழுவதும் அவருடையதாகவே இருக்கும். அந்த பரிசை மற்றவர்களுக்கு தரவோ, பகிர்ந்து கொள்ளவோ, ரத்து செய்யவோ முடியாது.

இந்த முடிவு இறுதியானது மற்றும் எல்லா காலத்துக்கும் பொருந்தும். நோபல் பரிசை ஒருவரிடமிருந்து பறிக்க சட்டப்படி எந்த வழியும் இல்லை” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு டிரம்பின் தொடர் கோரிக்கைகளுக்கு நேரடி பதிலாக பார்க்கப்படுகிறது. மச்சாடோவின் கருத்து வேடிக்கையாகவோ அல்லது அரசியல் நோக்கத்துடனோ இருந்தாலும், நோபல் அமைப்பு தனது விதிகளை மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நோபல் பரிசு ட்ரம்புட்ன் பகிர ஆசை!! வெனிசுலா அதிபர் கைதான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் விருப்பம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share