நான் ரியல் பிக்பாஸ்... என்னை ஜெயிக்க வைங்க..! சீமான் ஃபயர் ஸ்பீச்..!!
நான் ஷோ பாஸ் கிடையாது., ரியல் பிக் பாஸ் என சீமான் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசி இருந்தார். அவர் பேசுகையில், நான் ரியல் பாஸ்., அது ஷோ பாஸ்...நான் ரியல் பாஸ்...நான் ரியல் பிக் பாஸ்...புரிஞ்சிக்கானும் கவலையேபடாத… இதுக்காவாச்சு என்னை ஜெயிக்க வச்சிடுங்க என்று தெரிவித்தார். இப்போது நமக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்றால் பனை காலம் மூன்று மாதம் தான் வருகிறது என்றும்
ஆனால் தென்னையிலிருந்து எப்போதுமே மூலிகை சாறு வந்து கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தென்னை, ஈச்சை மரங்களை போட்டு உனக்கு எப்ப வேண்டுமோ மூலிகை சாறு குடி, நல்லா படி, மாட்டுக்கறி தின்னு, ஆட்டுக்கறி தின்னு, காய்கறி தின்னு, முட்டைய தின்னு, பால குடி ஜிம்முல போய் நல்லா பாடி ஏத்து.. எவன் வந்தாலும் அடி என தனது தொண்டர்களை உசுப்பேற்றும் வகையில் பேசினார்.
மத்த போதையை ஒழித்து விடுகின்றோம். இந்த கஞ்சாவை மட்டும் வைத்துக் கொள்கின்றோம்., கஞ்சா மூலமாக மருத்துவம் செய்வோம். இந்த கஞ்சாவை நானே வளர்த்து மருத்துவத்திற்கு பயன்படுத்துவேன். நீ பயன்படுத்தினால் உன்னை கொன்னே புடுவேன் என்று பேசி இருந்தார்
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்ல... அவன பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்..!! சீமானிடம் முறையிட்ட பெண்கள்..!!
இன்று மது, புகையிலை ஒழிப்பு குறித்து தெரிவித்துவிட்டேன்., நாளைக் கல்வி, வேலை வாய்ப்பு, தென்னையை எவ்வாறு பயன்படுத்தி பொருளாதரத்தை மேம்படுத்துவது என ஒவ்வொன்றாக இப்படி போட்டு காட்டுவேன் நீ வலையொலியில் தட்டி பாரு, நீ அப்படியே தட்டி பார்த்துட்டு லைக் போடாத, அண்ணனுக்கு ஒரு ஓட்டு போடு என்று கூறினார்.
தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் பாடல்களை பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடிக்கொண்டிருந்த போது இடையில் தொண்டர் ஒருவர் "Love You Thalaivaaa" என கூறியதும் "Me too da" என அவரைப் பார்த்து புன்னகையுடன் சீமான் தெரிவித்து தொண்டர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: குடிப்பவர்கள் வாக்கு எங்களுக்கு வேண்டாம்.. குடிமக்களின் வாக்குதான் தேவை..!! சீமான் தெறி ஸ்பீச்..!!