#BREAKING ஈரான் எடுத்த திடீர் முடிவு... ட்ரம்ப் அறிவித்த மறுகணமே அதிரடி மாற்றம்... உலகமே பெரும் எதிர்பார்ப்பு...!
இந்த சூழல் அப்படியே நீடிக்கக்கூடிய பட்சத்தில் இன்னும் கூட குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை கண்டிருக்கிறது.
அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது. இது உலகம் முழுவதும் பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த போர் நிறுத்தத்தை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உடைய விலை 100 டாலருக்கும் குறைவாக தற்போது சரிந்திருக்கிறது. இது உலக முழுவதும் இருக்கக்கூடிய நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முதல் காரணம் ஈரான் மீது அமெரிக்கா திட்டமிட்டபடி தாக்குதலை நடத்தி இருந்தால் கச்சா எண்ணெய் உடைய விலை 150 டாலரில் இருந்து 200 டாலராக அதிகரிக்க கூடும் என்கிற அச்சம் இருந்தது.
ஒருவேளை கச்சா எண்ணெயின் விலை பெருமடங்கு உயர்ந்தால் உலக அளவில் விலைவாசி உயரும் பெருமளவில் சிக்கல் ஏற்படும் என்கிற ஒரு அச்சம் இருந்தது. தற்போது ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைத்திருப்பதாலும் ஹோர்மூஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டிருப்பதாலும் கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்த கச்சா எண்ணெய் உடைய விலை என்பது தற்போது கணிசமாக குறைந்திருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 23% அளவுக்கு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING போர் நிறுத்தம்... ஈரானுடன் 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்...இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு...!
குறிப்பாக 116 டாலர் என்கிற நிலையிலிருந்து 92 மற்றும் 93 ஆகிய டாலர் வரை தற்போது குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆக கடந்த சில நாட்களாகவே 100 டாலர் என்கிற அந்த உச்சத்தை தாண்டி விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 100 டாலருக்கும் குறைவாக தற்போது கச்சா எண்ணெய் விலை என்பது சர்வதேச சந்தையில் நிர்ணயமாகி இருக்கிறது. இது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நுகர்வருக்கு கணிசமாக நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழல் அப்படியே நீடிக்கக்கூடிய பட்சத்தில் இன்னும் கூட குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவேளை குறைகிறதோஇல்லையோ ஏற்றம் காணாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!