×
 

முதல்முறையாக கொடூரம்.. இந்தியர்கள் சென்ற கப்பல் மீது பயங்கர தாக்குதல் - 20 பேரின் நிலை என்ன?

ஓமன் அருகே தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த 20 பேர்களில் 15 பேர் இந்தியர்கள் என்றும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஓமன் நாட்டின் அருகே கடல் பகுதியில் அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்கைலைட் என்ற எண்ணை கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் ஓமனின் மற்றொரு துறைமுக நகரமான அரபி கடலில் உள்ள ஜெக்கும் வணிக துறைமுகமும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ஓமன் அருகே தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த 20 பேர்களில் 15 பேர் இந்தியர்கள் என்றும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் மோதலுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே 20 பணியாளர்களில் 15 இந்தியர்களைக் கொண்ட ஒரு எண்ணெய் டேங்கர் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் நான்கு கடற்படையினர் காயமடைந்தனர். பலாவ் நாட்டின் கொடியை பறக்கவிட்டப்படி சென்ற எண்ணெய் டேங்கரான ஸ்கைலைட், கசாப் துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 5 கடல் மைல் தொலைவில் குறிவைக்கப்பட்டதாக ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது. உலகின் எண்ணெய் ஓட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட ஜலசந்தியில் டேங்கரை யார் தாக்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

அந்தக் கப்பலில் ஐந்து ஈரானியர்கள் உட்பட 20 பணியாளர்கள் இருந்தனர். டைம்ஸ் ஆஃப் ஓமன் செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தாக்குதலில் 4 கப்பல் பணியாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், 15 இந்தியர்கள் மற்றும் ஐந்து ஈரானியர்கள் உட்பட 20 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: உலகமே பேரதிர்ச்சி... ஈரான் பள்ளி மீது ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... 40 மாணவிகள் உடல் சிதறி பலி...!

முன்னதாக அரபிக்கடலில் உள்ள 'டுக்ம்' (Duqm) வணிகத் துறைமுகத்தில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இப்போது எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தனது தாக்குதல்களைத் தொடங்கிய பிறகு, ஓமன் எல்லைக்கு அருகே எண்ணெய் கப்பல் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் இருந்த இந்தக் கப்பல் மீதான தாக்குதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புதிய போர்ச் சூழலின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. 

டிசம்பர் 2025 இல், அமெரிக்க கருவூலம் செங்கடல் கப்பல் மேலாண்மை மற்றும் ஸ்கைலைட் உள்ளிட்ட கப்பல்களுக்கு தடை விதித்தது. இந்த கப்பல் நிறுவனமும் அதன் உரிமையாளரும் ஈரானிய பெட்ரோல் பொருட்களை வளைகுடா நாடுகளுக்கு கொண்டு செல்வதாக குற்றச்சாட்டப்பட்டு இந்த தடையானது விதிக்கப்பட்டது  

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இந்த ஜலசந்தி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு திறம்பட மூடப்பட்டுள்ளதாகவும், கப்பல்கள் விலகி இருக்குமாறு எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தேசிய கப்பல் கழகத்தால் இயக்கப்படும் மூன்று கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை ஜலசந்தியை நோக்கிச் செல்ல முயன்ற போது ஈரானால் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பற்றி எரியும் UAE... ஒரே நேரத்தில் 8 நாடுகள் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான்... பீதியில் உலகம்...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share