ஆப்ரேஷன் சிந்தூர் 2.0... சிதறும் பாகிஸ்தான்..! பழிதீர்க்க காத்திருக்கும் இந்தியா..!
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 நடக்க இந்திய நாடகம் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஆப்ரேஷன் சிந்து 2.0 திட்டத்திற்கு இராணுவம் தயாராகி வருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பகல்காம் மற்றும் பூஞ்ச் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற பாகிஸ்தானின் அத்துமீறிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என இன்று காலை மதிய அமைச்சர்கள் கூறி இருந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானின் வான் தாக்குதலை இந்தியா முறியடித்தது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு..! இந்திய ராணுவத்தின் தரமான சம்பவம்..!
அவந்திப்போரா, பதான்கோட், ஜம்மு ஸ்ரீநகர், அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மேலும், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம் பூர், பதின்டா, சண்டிகர் ஆகிய பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பதினாறு உயிர்களை எடுத்த பாகிஸ்தானுக்கு மீண்டும் பதிலடி கொடுப்பது கட்டாயம் என இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பார்ன் ரேடார் அமைப்புகளை இந்தியா தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாக்.-ல் இருந்து ஊடுருவியவர் சுட்டுக்கொலை..! மர்ம பொருளை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படையினர்..!