×
 

பாக்., இதயப்பகுதியை சுக்குநூறாக்கிய தலிபான்!! 200KM உள்ளே புகுந்து மரண அடி!! இஸ்லாமாபாத் காலி?!

‛அல்லாவின் பெயரால் ஆப்கன் ராணுவம் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் வரை சென்று வான்வழி தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்’ என்று தலிபான்கள் கூறினர்.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லைப் பதற்றம் முழு போராக வெடித்துள்ளது. தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உள்ளிட்ட கிளர்ச்சி குழுக்கள் ஆப்கான் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்திய நிலையில், பாகிஸ்தான் பதிலடி கொடுக்க ஆப்கன் எல்லைக்குள் புகுந்து குண்டுவீசியது.

கடந்த 22-ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் குண்டு மழை பொழிந்தன. இதில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டதாக தலிபான் தரப்பு குற்றம்சாட்டியது. 

இதனால் கோபமடைந்த ஆப்கான் தலிபான் ராணுவம் நேற்றிரவு (பிப்ரவரி 26-27) மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 55 பாக் ராணுவ வீரர்களை கொன்றதாகவும், 19 ராணுவ நிலைகளை கைப்பற்றியதாகவும், சிலரை உயிருடன் பிடித்ததாகவும் தலிபான் அறிவித்தது. ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியது.

இதையும் படிங்க: வரிவிதிப்பை ரத்து செய்ய மறுப்பு! அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கறார்!! மறு விசாரணை கேட்டு கெஞ்சும் ட்ரம்ப்!

இதற்கு உடனடி பதிலடி கொடுத்த பாகிஸ்தான், ஆப்கனை ஏவுகணை, ராக்கெட் தாக்குதல்களால் தாக்கியது. தரைவழி தாக்குதலும் நடந்தது. 133 தலிபான்களை கொன்றதாகவும், 27 ராணுவ நிலைகளை கைப்பற்றியதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால் தலிபான்கள் உயிரிழப்பு இல்லை என மறுத்தனர்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் "ஆப்கனுக்கு எதிராக முழு நீளப் போரை தொடங்கிவிட்டோம்" என்று 'ஓப்பன் வார்' அறிவித்தார். இதற்கிடையே தலிபான்கள் பாகிஸ்தானின் ஆழமான பகுதிகளுக்கு ட்ரோன் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கான் எல்லையில் இருந்து சுமார் 200 கி.மீ. தாண்டி தலைநகர் இஸ்லாமாபாத் வரை ட்ரோன்கள் சென்று குண்டு வீசின. ஃபைசலாபாத் பகுதி, நவ்ஷேரா ராணுவ கன்டோன்மென்ட், ஜம்ருட் ராணுவ தளம், அப்போடாபாத் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடந்ததாக தலிபான் அறிக்கை வெளியிட்டது. "அல்லாவின் பெயரால் வெற்றி பெற்றோம். இஸ்லாமாபாத் வரை வான்வழி தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினோம்" என தலிபான் பெருமிதம் தெரிவித்தது.

பாகிஸ்தான் இந்த ட்ரோன்களை தனது ஆன்டி-ட்ரோன் அமைப்புகளால் சுட்டு வீழ்த்தியதாகவும், உயிரிழப்பு இல்லை எனவும் கூறியது. ஆனால் தலிபான் தரப்பு வெற்றிகரமான தாக்குதல் என வலியுறுத்துகிறது. பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

TTP, பலூச் விடுதலை ராணுவம் (BLA) போன்ற குழுக்களை ஆப்கான் தலிபான் ஆதரிப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இது நீண்டகால பதற்றத்தின் உச்சக்கட்டமாக அமைந்துள்ளது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. சர்வதேச சமூகம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... அதிமுகவை கழட்டிவிடும் கட்சிகள்..!! SDPI திமுகவுடன் கூட்டணி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share