கெத்து காட்டிய கத்தார்... தட்டித்தூக்கிய துருக்கி... பாக், ஆப்கான் மோதலுக்கு முடிவு...!
இஸ்தான்புல்லில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் போரைக் கைவிட சம்மதித்துள்ளதாக துருக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்தே பாகிஸ்தான் உடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ என்ற பயங்கரவாத அமைப்பு தங்கள் நாடு மீது பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்ச்சி வருவதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே இரு நாடுகளும் தீவிர வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏராளமான பொதுமக்கள், ராணுவ வீரர்கள், தாலிபான்கள் பலியாகி வந்தனர். மேலும் இந்த மோதல்கள் காரணமாக இரண்டு நாடுகளிலும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. இஸ்தான்புல்லில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளும் துருக்கி, கத்தார் முன்னிலையில் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சல்மான் கான் தீவிரவாதி... பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு...! ரசிகர்கள் ஷாக்...!
ஏற்கனவே பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நிரந்தர போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பினரும் போர்நிறுத்தத்தைத் தொடர்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
நிரந்தர போர் நிறுத்தத்தை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை முடிவு செய்ய நவம்பர் 6 ஆம் தேதி இஸ்தான்புல்லில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும், துருக்கியும் கத்தாரும் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இரு தரப்பினருடனும் ஒத்துழைப்பைத் தொடரத் தயாராக உள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதையும் படிங்க: பாகிஸ்தான் பார்டரை சுத்துப்போட்ட இந்திய முப்படை... 'திரிசூல்' வியூகத்தை பார்த்து மிரண்டு போன பாக். பிரதமர்...!
 by
 by
                                    