×
 

போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பாகிஸ்தான் விமானி சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களை ஒரே நேரத்தில் குறி வைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்திய பகுதிக்கு வர முயன்ற பாகிஸ்தானின் ஒரு F16 மற்றும் JF 17S என்ற இரண்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. மொத்தமாக மூன்று போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தின. வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது தரைவழி தாக்குதலும் இந்தியா பாகிஸ்தான் இடையே தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பாகிஸ்தான் விமானி சிறைபிடிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் F16 போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்திய நிலையில், பாகிஸ்தான் விமானி சிறைபிடிக்கப்பட்டுள்ளதை உளவுத்துறை உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அந்நாட்டு விமானி சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: போர் பதற்றம்! முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

இதையும் படிங்க: பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் எதிரொலி! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share