பாகிஸ்தானையே அலறவிட்ட TLB?! புது ரூட்டை கண்டுபிடித்த பாக்., அரசு! வருகிறது தடை!
பாகிஸ்தானில் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், டி.எல்.பி கட்சிக்கு தடை விதித்து, வங்கிக் கணக்குகளை முடக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் தீவிர முஸ்லிம் கட்சியான தெஹ்ரிக்-இ-லப்பை (TLP) காசா மக்களுக்கு ஆதரவாக நடத்திய போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், அந்நாட்டு அரசு கட்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தில் சாலைகள் மூடப்பட்டு, இணைய சேவைகள் முடக்கப்பட்டன. 2,700-க்கும் மேற்பட்ட TLP தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், சமூக ஊடக கணக்குகள் தடை செய்யப்படும். இது TLP-வின் 4,500 தொண்டர்களையும், தலைவர்களையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.
அக்டோபர் 10-ஆம் தேதி (வெள்ளி) இருந்து TLP, காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போரை எதிர்த்து போராட்டம் தொடங்கியது. அக்டோபர் 10-ஆம் தேதி லாகூர் (பஞ்சாப்) இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கானோர் பேரணியாக செல்ல முயன்றனர். போலீஸ் தடுத்ததும், TLP-வினர் போலீஸ் வாகனங்களை மறித்து, கற்கள், கம்புகளால் தாக்கினர். போலீஸ் கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள், துப்பாக்கிச் சூடு பயன்படுத்தி கட்டுப்படுத்தினர்.
இதையும் படிங்க: கலவரக்காடான பாகிஸ்தான்!! அலற விடும் தீவிர முஸ்லிம் கட்சி! மேலும் 13 பேர் சுட்டுக்கொலை!
அக்டோபர் 13-ஆம் தேதி முரிட்கே (லாகூர் அருகில்) TLP போராட்ட முகாம் அகற்றப்பட்டபோது கடுமையான மோதல் வெடித்தது. TLP தலைவர் சாத் ரிஸ்வி சுடப்பட்டு படுகாயமடைந்ததாக கூறுகிறது. போலீஸ், 3 போராட்டக்காரர்கள், 1 போலீஸ் உயிரிழந்ததாகக் கூறுகிறது; TLP 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. 50 போலீஸ் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் பெட்ரோல் பாம்ப், கற்கள், கம்புகள் பயன்படுத்தினர்.
பதட்டம் அதிகரித்ததால், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. TLP-வின் செயல்கள் "பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு, சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் TLP-வை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
வங்கிக் கணக்கு முடக்கம், சொத்து பறிமுதல், சமூக ஊடக தடை, தலைவர்கள் கைது திட்டம். பஞ்சாப் அரசு சட்டம்-ஒழுங்கு குறித்து 2 நாட்கள் பொது கூட்டங்கள் தடை (Section 144) விதிக்கப்பட்டுள்ளது.
TLP, சுன்னி முஸ்லிம் கட்சி, 2017-ல் புனித நூல் அவமானப்படுத்தப்பட்டதாக போராட்டத்தில் குதித்த போது பிரபலமானது. அக்கட்சி மீது 2021-ல் தடை விதிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டது. அமெரிக்காவும் 2019-ல் இக்கட்சியை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, 2021-ல் நீக்கியது. TLP, காசா போரை எதிர்த்து அமெரிக்கா-இஸ்ரேல் விரோத போராட்டம் நடத்தியது. அரசு, "காசா சூழலை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறது" என குற்றம் சாட்டுகிறது.
பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்தால், TLP-வின் 4,500 தொண்டர்கள், தலைவர்கள் கைது. போராட்டம் தொடர்ந்தால் மேலும் பதட்டம் அதிகரிக்கும். இது பாகிஸ்தான் அரசியலில் புது சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: சிறையில் சித்ரவதை பண்ணுறாங்க!! நானும், என் மனைவியும் ரொம்ப பாவம்! இம்ரான் கண்ணீர்!