×
 

அடி வாங்கியும் அடங்காத பாக்.,!! கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல்! கொக்கரிக்கும் ராணுவ அமைச்சர்!

“எதிர்காலத்தில் இந்தியா ஏதேனும் தாக்குதல் நடத்தினால், அங்குள்ள கொல்கட்டாவில் தாக்குதல் நடத்தப்படும்,” என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் கொல்கத்தாவை குறிவைத்து பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தான் தேவையின்றி அத்துமீறினால், முன்னெப்போதும் இல்லாத பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட்டில் நிருபர்களைச் சந்தித்த ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், “இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: அமெரிக்கா எங்களை தாக்கினால் இந்தியாவை அடிப்போம்!! டெல்லி , மும்பை மீது குண்டு வீசுவோம்! பாக். முன்னாள் தூதர் திமிர்!

இந்திய உளவாளிகள் அல்லது பாகிஸ்தானியர்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தவும், பழியை பாகிஸ்தான் மீது போடவும் இந்தியா முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அப்படி ஏதாவது நடந்தால், நாங்கள் கொல்கத்தாவை (கல்கத்தா) குறிவைத்து தாக்குதல் நடத்துவோம். இது மிகத் தீவிரமானதாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவிலானதாகவும் இருக்கும்” என்று கூறினார்.

இந்த எச்சரிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய தாக்குதல் நடவடிக்கையை பாகிஸ்தான் இன்னும் மறக்கவில்லை என்றும், அதற்கான பதிலடியை எச்சரிக்கையாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடையும் அபாயம் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியா தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் வராத நிலையில், பாகிஸ்தான் அமைச்சரின் இந்தக் கருத்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் உஷார் நிலையில் உள்ளன. எந்த நேரத்திலும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!! ராஜ்நாத் சிங் உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share