"உடனே மூடுங்க.." இந்தியாவுக்கு பயந்து உத்தரவிட்ட பாக்., பதறி துடிக்கும் மக்கள்..!
பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாதில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக பொருளாதாரம் மிகவும் பின்னடைந்துள்ளது. இதனால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் கடன் உதவி கோரி இருந்தது. இந்த சூழலில் தான் இப்போது பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானை பொறுத்தவரைக்கும் பெட்ரோல் டீசல் முக்கியமான வளமாக உள்ளது. தற்போது பாகிஸ்தானில் கடும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானுடைய தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று காலை 6 மணி முதல் அடுத்து வரக்கூடிய 48 மணி நேரத்திற்கு அனைத்து பெட்ரோல் பங்க் நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: சரக்கு மிடுக்கு நாடகத்துக்கு சவுக்கடி... 2 பகுதிகளை இழந்த பாகிஸ்தான்..! உள்ளூரில் விழுந்த உறியடி..!
கடும் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கக்கூடிய பாகிஸ்தானில் தற்பொழுது பெட்ரோல் தட்டுப்பாடும் என்பது ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மேலும் விலைவாசி உயர்வதற்கான வாய்ப்புகளும் அதிகளவு இருக்கிறது.
இதையும் படிங்க: வெறி ஏற்றிய பாகிஸ்தான்.. மொத்தமாய் முடிக்க ரெடி..! இந்தியாவின் "மாஸ்டர் பிளான்"..!