×
 

மக்களுக்கு குறி வைக்கும் பாக்., நன்றி மறந்த துருக்கியுடன் நயவஞ்சக கூட்டணி.. அமிர்தசரஸில் ரெட் அலர்ட்..!

சமீபத்தில் நிலநடுக்கத்தால் நிலை குழைந்த துருக்கி நாடுக்கு ஆப்ரேஷன் தோஸ்த் மூலம் இந்தியா முதல் ஆளாக களமிறங்கி உதவிகளை செய்தது. இதையெல்லாம் மறந்த துருக்கி இந்தியாவை தாக்க பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை வழங்கி உள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் பெண்களின் கண்முன்னே அவர்களின் கணவரை சுட்டுக்கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் செயல்படும் இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாயினர். இது இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து எல்லையில் தினம்தோறும் பாக்., ராணுவம் அத்துமீறி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்தை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம்  தாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் மேற்கு எல்லைகளை குறிவைத்து ட்ரோன்களை ஏவுகிறது. இன்று அதிகாலையில் பஞ்சாபின் அமிர்தசரஸின் காசா கான்ட் பகுதியை  குறிவைத்து பாகிஸ்தானின்  5 ட்ரோன்கள் தாக்க வந்தன. 

இதையும் படிங்க: ராணுவ தளபதிக்கு கூடுதல் பவர்.. இனி ஒருத்தன் வாலாட்டக்கூடாது! ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 அதிரடி அப்டேட்!

அவற்றை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் பாகிஸ்தானின் தாக்குலை ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள இந்திய ராணுவம், எதிரிகளின் தாக்குதலை முறியடிப்போம் என கூறியுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ட்ரோன்களின் பாகங்கள் அமிர்தசரஸின் பல இடங்களில் சிதறி கிடக்கின்றன. வீடுகள் மீது அதன் பாகங்கள் விழுந்தன. அவற்றை ராணுவத்தினர், போலீசார் சேகரித்தனர்.

இந்த  ட்ரோன் சிதைவுகளின் தடயவியல் ஆய்வு தற்போது நடந்து வருகிறது. முதற்கட்ட அறிக்கைகள் அந்த ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்ட Asisguard Songar வகை மாதிரிகள் என்று தெரிவிக்கின்றன. இவை பாகிஸ்தானுக்கு துருக்கி கொடுத்த YIHA III ட்ரோன்கள் என்பது வெட்ட வெளிச்சமானது.  துருக்கி படைகளால் பயன்படுத்தப்படும் முதல் ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் இவை,.

கடந்த 2023ல் துருக்கியின் அங்காரா உள்ளிட்ட இடங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, ‘ஆபரேஷன் தோஸ்த்’ மூலம் மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா முதல் ஆளாக களம் இறங்கியது. இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க ‘கருடா’ ட்ரோன்களையும், மீட்பு பணிகளுக்கு ‘சி17’ ரக போர் விமானங்களையும் அனுப்பி உதவியது. 

நமது தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  ஆபத்து காலத்தில் இந்தியா செய்த உதவியை மறந்த துருக்கி, கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி வருகிறது. தொடர்ந்து அமிர்தசரஸ் நகர் குறி வைக்கப்பட்டதால் அப்பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் படங்களும் வெளியீடப்பட்டுள்ளது.  மக்களை குறி வைக்கும் பாகிஸ்தான் முகத்திரை தற்போது கிழிந்ததுள்ளது.

இதையும் படிங்க: பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share