×
 

அடச்சீ.. இதுக்காகவா..!! ஆப்ரேஷனை பாதியில் விட்டு ஓடிய பாக். டாக்டர்..!! நடந்தது என்ன..??

நோயாளியை அறுவை சிகிச்சையின் நடுவில் விட்டுவிட்டு ஒரு நர்ஸ் உடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பாகிஸ்தான் மருத்துவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் சுஹெய்ல் அஞ்சும் (Suhail Anjum), 44 வயதான அறுவை சிகிச்சை நிபுணர், தனது நோயாளியை அறுவை அறையில் விட்டுவிட்டு, அருகிலுள்ள மற்றொரு அறுவை அறைக்குச் சென்று செவிலியர் ஒருவருடன் உடல் உறவில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று, க்ரேட்டர் மான்செஸ்டரில் உள்ள டேம்சைட் ஜெனரல் மருத்துவமனையில் (Tameside General Hospital) நடந்தது.

இந்நிலையில் இந்த வாரம் மான்செஸ்டரில் நடைபெற்ற மருத்துவர்கள் தீர்ப்பாய் கூட்டத்தில் (Medical Practitioners Tribunal) மருத்துவர் அஞ்சும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று காலை, அறுவை அறை எண் 5-ல் ஐந்து அறுவை சிகிச்சைகளை அவர் கண்காணித்து வந்தார். 

இதையும் படிங்க: எந்த கொம்பனாலும் திமுகவை தொட முடியாது... கெத்தா சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

மூன்றாவது சிகிச்சையில், நோயாளி மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில் இருந்தபோது, அஞ்சும் சற்று நேரம் ஓய்வு எடுக்கிறேன் என்று கூறி, அறுவையை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். மேலும் அங்கிருந்த மற்றொரு செவிலியரிடம் நோயாளியை கண்காணிக்குமாறு கூறியுள்ளார். ஆனால், உண்மையில் அவர் அருகிலுள்ள அறுவை அறைக்குச் சென்று, ஒரு செவிலியருடன் உடல் உறவில் ஈடுபட்டார். 

அந்த செவிலியரின் பேண்ட் முழங்காலுக்கு கீழே இருந்ததையும், அஞ்சும் தனது பேண்ட் பெல்ட்டை கட்டிக்கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு செவிலியர், உடனடியாக இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணைத் தொடங்கியது.

அஞ்சும், திருமணமானவர், இப்போது பாகிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளார். 2024 பிப்ரவரியில் ஐ.என்.எஸ். (NHS) விட்டு விலகி, லிவர்பூலில் சிறிது காலம் பணியாற்றிய பின், ஜனவரி 2025-ல் பாகிஸ்தானுக்கு திரும்பினார். தீர்ப்பாய் கூட்டத்தில் பேசிய அஞ்சும், தனது மனைவியுடன் சரியான உறவில் இல்லாத காலகட்டத்தில், மன அழுத்தத்தில் இது நடந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தால் எனக்கு அவமானமும் குற்ற உணர்வும் உண்டு. ஏன் இப்படி நடந்தது என்று தெரியவில்லை. என் தொழில் என் அன்பு, ஆனால் இது என்னை உடைத்துவிட்டது. இனி இது நடக்காது. ஆனால் அது குற்ற உணர்ச்சியையும் சங்கடத்தையும் போக்காது என டாக்டர் அஞ்சும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அணிலை ஆமையாக்கிட்டானுங்களே.... விஜய்க்கு பேரதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share