இந்தியா மீது ஓயாமல் ட்ரோன் தாக்குதல்.. பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை துவம்சம் செய்து அழித்த இந்தியா!
பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது.
பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டும் இந்தியா தாக்கி அழித்தது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் தாக்குதலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தியாவின் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்தத் தாக்குதல்களுக்கு இந்தியாவும் சலிக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை நடுவானிலேயே மறித்து இந்திய விமானப் படை அழித்து வருகிறது.
நேற்று முன்தினம் பாகிஸ்தான் தொடங்கிய ட்ரோன் தாக்குதல் நேற்று இரவும் நீடித்தது. இதுவரை பாகிஸ்தானின் நூற்றுக்கணக்கான ட்ரோன் தாக்குதல்களை இந்திய மீது நடத்தியுள்ளது. ஆனால், அவற்றை இந்திய விமானப் படை முறியடித்துள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, ரஜோரி, மாவட்டங்களை நோக்கி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை இந்திய விமானப் படை உடனடியாக அழித்து பதிலடி கொடுத்தது. இதேபோல் ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை குறி வைத்தும் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. தலைநகர் டெல்லியை தாக்கும் முயற்சியிலும் பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது பீரங்கி தாக்குதலை இந்தியா தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: ப்ளீஸ் பதற்றத்தைக் குறைங்க.. நிதானமா இருங்க.. இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 கூட்டமைப்பு அட்வைஸ்!
இந்நிலையில் பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை இந்திய ராணுவம் கண்டறிந்து அழித்துள்ளது. எல்லையில் ஜம்மு காஷ்மீரை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் ஏவுதளம் இருப்பது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏவுதளத்தை கண்டறிந்த இந்திய ராணுவம், அதை தாக்கி அழித்தது. இந்தக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா மீது ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளம் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் தாக்குதல்களை சுக்கு நூறாக்கிய இந்திய ராணுவம்.. இந்திய பதிலடியில் பொறி களங்கிய பாகிஸ்தான்!!