×
 

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விழுந்த மரண அடி! பாலஸ்தீன அதிபரின் முக்கிய உத்தரவு! இஸ்ரேல் போரில் ட்விஸ்ட்!

எதிர்காலத்தில் காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் எவ்வித பங்களிப்பையும் வழங்கக்கூடாது. ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களை இப்போதைய பாலஸ்தீன தேசிய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது குறித்து முக்கிய விவாதம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமாக இருக்கும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள், ஹமாஸ் போன்ற ஆயுதக் குழுக்களின் தலையீடு இல்லாத ஒரு அரசு அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிரமான போரில் ஈடுபட்டுள்ளது. "ஹமாஸை முற்றிலும் அழிக்கும் வரை போர் நிற்காது" என்று இஸ்ரேல் உறுதியாக அறிவித்துள்ளது. ஆனால், இதற்கு மத்தியில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலக அரங்கில் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. 

உலகின் பல நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இருப்பினும், இஸ்ரேல் "எந்தக் காரணத்தைக் கொண்டும் பாலஸ்தீனை தனி நாடாக அனுமதிக்க மாட்டோம்" என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதையும் படிங்க: 48 மணி நேரம் தான் டைம்! எல்லாரும் வெளியே போங்க! தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!

இந்தப் பின்னணியில், ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் வீடியோ மூலம் உரையாற்றினார். அவர் தனது உரையில், "பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஐநாவில் முழு உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு உங்கள் ஆதரவை கோருகிறோம்," என்றார். 

மேலும், "காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் எந்தப் பங்களிப்பையும் செய்யக் கூடாது. ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களை பாலஸ்தீன தேசிய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆயுதங்கள் இல்லாத, ஒரே சட்டத்தின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த அரசையே நாங்கள் விரும்புகிறோம்," என்று வலியுறுத்தினார்.

மஹ்மூத் அப்பாஸ், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் கண்டித்தார். "போர் முடிந்தவுடன், அதிபர் பதவி மற்றும் பாராளுமன்றத்திற்கு தேர்தல்கள் நடத்தப்படும். மூன்று மாதங்களுக்குள் இடைக்கால அரசியலமைப்பு வரைவு உருவாக்கப்படும். தற்போதைய அதிகார சபையின் அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.

ஐநாவின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தாலும், ஐநாவில் முழு உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் தேவை. ஆனால், அமெரிக்கா தனது 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி இதைத் தடுக்க வாய்ப்புள்ளது. இது பாலஸ்தீனத்தின் முயற்சிகளுக்கு பெரும் தடையாக உள்ளது.

இந்த விவாதம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், ஹமாஸின் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஒருமித்த கருத்து வெளிப்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், ஐநாவில் தொடர்ந்து முக்கியப் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க: இரவு முழுவதும் நடந்த தாக்குதல்! பற்றி எரியும் காசா!! இஸ்ரேல் புதிய தாக்குதல் திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share