#BREAKING: ஜன.1 முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என திமுக அரசு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் நிதிநிலை அறிக்கையில் கூட பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் பட்ஜெட்டில் கூட எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதை அடுத்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற தொடர்ந்து கோரிக்கையை வைத்து வந்தனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
ஜனவரி ஆறாம் தேதி மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ அமைப்புகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படிங்க: வாக்குறுதி 181... திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு பதிலடி காத்திருக்கு... அண்ணாமலை கண்டனம்..!
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதற்கான விதிகள் தனியே வெளியிடப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண் எரித்துக் கொலை..! செயலிழந்து கிடக்கும் திமுக அரசு.. TVK கடும் கண்டனம்..!