×
 

பாக். ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம்.. இதுதான் காரணம்; பென்டகன் வட்டாரம் தகவல்!!

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு படை தலைமையகமான பென்டகன் வட்டார தகவல் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதல் மறுநாள் அதிகாலை வரை நீடித்தது.

விடிய விடிய நடந்த மோதலில் பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு படை தலைமையகமான பென்டகன் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு படை தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரியும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த உறுப்பினருமான மைக்கேல் ரூபின், இந்தியாவின் தாக்குதலில், பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும். துல்லியமான ராணுவத் தாக்குதல்களில் தாக்கப்பட்ட இலக்குகளில் மேற்கண்ட இடங்கள் அடங்கும்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் உளவாளி கைது... விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!!

இந்த முகாம்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதல் உட்பட பயங்கரவாதத் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள ஜெ.எம் இன் செயல்பாட்டுத் தலைமையகம் மர்காஸ் சுப்ஹான் அல்லா ஆகும். புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் இந்த முகாமில் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

17 வருடங்களுக்கு முன் மும்பை தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இங்குதான் பயிற்சி பெற்றார். இந்த அளவிற்கு தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்தை விட்டது குறித்து பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாம். இதன் காரணமாக பாகிஸ்தான், பயந்துபோன நாயைப் போல, வாலை கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு போர் நிறுத்தத்தை அடைய ஓடியது.

தாங்கள் தோற்றது மட்டுமல்லாமல், மிக மோசமாகத் தோற்றார்கள் என்ற முழு யதார்த்தத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வந்தது. இப்போது நடந்ததை வைத்து பார்த்தால் இனி பாகிஸ்தான் ராணுவத்தால் எந்தத் தாக்குதலையும் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம். பாகிஸ்தான் இராணுவத்திற்குள் பெரிய பிரச்சனை இருப்பது தெளிவாகத் தெரிகிறது, பாகிஸ்தான் சமூகத்தில் ஒரு புற்றுநோயாகவும் ராணுவம் மாறிவிட்டது.

ராணுவமாக, அது திறமையற்றதாகவும் உள்ளது. அசிம் முனீர் தனது வேலையைத் தொடர்வாரா? என்பது சந்தேகம்தான். வரும் நாட்களில் நிறைய மாற்றங்கள் பாகிஸ்தானில் நடக்கலாம். பாகிஸ்தான் எதிர்பார்க்காத கசப்பான மாற்றங்களாக கூட அது இருக்கும். அடுத்த சில மாதங்களாவது பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share