×
 

மார்க்கெட் உச்சத்துல இருக்க நான்தான் காரணம்!! வம்பிழுக்கும் வால் ஸ்ட்ரீட் - பெருமை பீத்தும் ட்ரம்ப்..!

நான் இல்லையென்றால், அமெரிக்க சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது, செயல் இழந்திருக்கும்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபலமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி நிறுவனம், அமெரிக்காவோட பொருளாதார நாடகத்துல ஒரு புது அத்தியாத்தை எழுப்பி இருக்கு. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலை தூக்கணும்னு புலம்பிக்கிட்டு இருக்கார். ஆனா, அவரோட நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், “பாஸ், இப்போ பவலை தொடாதீங்க, மார்க்கெட் கவுந்துடும்!”னு சொல்லி தடுத்து நிறுத்தியிருக்காராம். இதை WSJ ஒரு கிசுகிசு செய்தியா வெளியிட்டு, ட்ரம்பை கடுப்பாக்கி இருக்கு, பதிலுக்கு அவரு “இது பொய்ய்ய்!”னு ட்ரூத் சோஷியல்ல கதறிக்கிட்டு இருக்காரு.

ட்ரம்புக்கு பவல் மேல எப்பவுமே ஒரு கோபம். ஏன்னா, பவல் வட்டி விகிதங்களை (interest rates) ட்ரம்பு சொன்ன மாதிரி குறைக்க மாட்டேங்கறார். ட்ரம்பு, “வட்டி விகிதம் குறைஞ்சா, கடன்கள் எளிதாகிடும், பொருளாதாரம் பறக்கும்”னு நினைக்கறார். ஆனா, பவல், “அப்படி குறைச்சா பணவீக்கம் தாறுமாறா ஆகிடும்”னு உறுதியா நிக்கறார். இதனால ட்ரம்பு, பவலை “என்னோட மோசமான நியமனம்”னு சொல்லி, “இவரு வேலை நீடிக்கறது கஷ்டம்!”னு அடிக்கடி மிரட்டறார்.

WSJ சொல்றத பார்த்தா, பெசென்ட் ட்ரம்புக்கு அட்வைஸ் பண்ணியிருக்காரு, “பவலை இப்போ தூக்கினா, மார்க்கெட் சரிஞ்சு, சட்ட ரீஷமா வழக்கு வரை போயிடும். பவல் 2026 மே வரை தலைவரா இருக்கார், அதனால இப்போ அமைதியா இருங்க”னு. ஆனா, ட்ரம்பு இதை மறுத்து, “யாரும் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம், நான் தான் மார்க்கெட்டுக்கு காவல்காரன்!”னு பீத்திக்கறார். “நான் இல்லைனா, இப்போ மார்க்கெட் உச்சத்துல இருக்காது, கிராஷ் ஆகியிருக்கும்!”னு சொல்லி தன்னை தூக்கி வச்சுக்கறார்.

இதையும் படிங்க: அடிமடியில் கை வைத்த அமெரிக்கா.. காசு வராதே! கவலையில் பாக்., அறிவித்த உலக மகா உருட்டு!!

இதுல சுவாரஸ்யமான விஷயம் என்னனா, பெசென்ட் இப்போ பவலை தூக்க வேண்டாம்னு சொன்னாலும், அவர் பவலோட பதவிக்கு ஒரு மாற்று ஆளை தேடற “ஃபார்மல் ப்ராசஸ்” ஆரம்பிச்சுட்டதா சொல்றார். கெவின் வார்ஷ், கிறிஸ்டோஃபர் வாலர், இன்னும் சில பேரோட பெயர் அடிபடுது. இதுல பெசென்ட் பெயரும் உண்டு, ஆனா அவர், “நான் இப்போ நிதியமைச்சரா சந்தோஷமா இருக்கேன்”னு சொல்லி தப்பிச்சுக்கறார்.

இந்த ட்ராமாவுல மார்க்கெட் ஒரு நாள் டவுன், ஒரு நாள் அப்-னு ஆடுது. ட்ரம்பு பவலை தூக்குவாருனு ஒரு செய்தி வந்தா, S&P 500 சரியுது; “இல்ல, தூக்க மாட்டேன்”னு ட்ரம்பு சொன்னா, மறுபடி மார்க்கெட் எகிறுது. இதுக்கு நடுவுல, ட்ரம்பு WSJ-ஐ “பொய் பரப்புறவங்க”னு திட்டி, அவங்க மேல 10 பில்லியன் டாலர் மானநஷ்ட வழக்கு போட்டிருக்கார், வேர ஒரு விஷயத்துக்கு.

சுருக்கமா சொன்னா, ட்ரம்பு தன்னோட பொருளாதார ஷோவை ஓட்டிக்கிட்டு இருக்கார். பவல் தாக்குப்பிடிப்பாரா, இல்ல ட்ரம்பு தன்னோட “You’re fired!” டயலாக்கை உபயோகிப்பாரானு? மார்க்கெட் நிபுணர்கள் கலக்கத்துல இருக்காங்க 

இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரில் 5 ஜெட் காலி.. நான் தான் போரை நிறுத்தினேன்..! குட்டையை குழப்பும் ட்ரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share