×
 

இந்திய வம்சாவளியினர் அனைவரும் கலாச்சார தூதர்கள்..! உள்ளம் நெகிழ்ந்த மோடி.. கிஃப்டில் வைத்த ட்விஸ்ட்..!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், நமது நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்கள் என்று டிரினிடாட் அன்ட் டொபாகோவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கானா பயணத்தை முடித்துக்கொண்டு தென்அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு அருகே உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு (Trinidad and Tobago) நாட்டுக்குச் சென்றார். தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் பிரதமர் மோடியை, அந்த நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸெசார் மற்றும் இந்திய வம்சாவழியினர் வரவேற்றனர்.

வரவேற்புக்கு நன்றி தெரிவித்து இந்திய வம்சாவழியினர் முன்பு பிரதமர் மோடி பேசியதாவது: டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இந்திய சமூகத்துடன் இருப்பது மிகவும் இயல்பான உணர்வைத் தருகிறது. ஏன் என்றால் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் பகுதி.

உங்கள் முன்னோர்கள் இந்திய மண்ணை விட்டு வந்தாலும், அவர்கள் சனாதன தர்மத்தையும்,  நமது பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துச் சென்றனர். ராமர் மீதான உங்கள் நம்பிக்கையை நான் நன்கு அறிவேன்.  உங்கள் ஊரில் உள்ள ராமர் கோயில்கள் தனித்துவமானவை.

இதையும் படிங்க: கானா சென்ற பிரதமர் மோடி.. உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

500 ஆண்டுக்கு பிறகு ராமர் அயோத்திக்கு திரும்பியதை நீங்கள் வரவேற்றீர்கள். ராமர் கோயில் கட்ட புனித நீரையும், சிலைகளையும் அனுப்பி வைத்தீர்கள்.  அதே போன்ற உணர்வுடன் ராமர் கோயிலின் மாதிரியையும், புனித சரயு நதியில் இருந்து தீர்த்த்தையும் இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.  அது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 

அயோத்தி -  கடவுள் ஸ்ரீராமரின் நகரம்.  இப்போது அது  புதிய உயரங்களை எட்டி வருகிறது.  அதன் வளர்ச்சியை நேரில் காண உங்களை அன்புடன் அழைக்கிறேன். 25 ஆண்டுக்கு முன் நான் இங்கு வந்தபோது இருந்த உறவை விட,  தற்போது நட்பு இன்னும் வலுப்பெற்றுள்ளது. வாரணாசி, பாட்னா,  கொல்கத்தா மற்றும் டில்லி இந்தியாவின் நகரங்களாக இருக்கலாம். ஆனால் இங்கேயும் அந்த பெயர்களில் தெருக்கள் உள்ளன. நவராத்திரி, மகாசிவராத்திரி மற்றும் ஜென்மாஷ்டமி இங்கே மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன. 

இளைய தலைமுறையினரின் பிரகாசமான கண்களில் ஆர்வத்தைக் காண்கிறேன். எங்களின் பிணைப்புகள் புவியியல் மற்றும் தலைமுறைகளுக்கு அப்பாற்பட்டவை. இந்திய வம்சாவளியினர் கங்கையையும், யமுனையையும் விட்டுவிட்டு வந்துவிட்டனர்.. ஆனால் அவர்களுடைய இதயத்தில் ராமாயணத்தை வைத்திருக்கின்றனர்.

அவர்கள் சொந்த மண்ணை விட்டுச் சென்று இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆன்மாவை விட்டுச் செல்லவில்லை. நீங்கள் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் மட்டும் இல்லை. ஒரு கால எல்லை இல்லாத பழமையான கலாசாரத்தின் தூதர்கள். 

உங்கள் பங்களிப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஆன்மீக மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பங்களித்திருக்கிறது.  நான் அடிக்கடி சொல்வது போல், நீங்கள் ஒவ்வொருவரும் இந்தியாவுக்கு மதிப்பு மிக்கவர்கள்.   இந்தியக் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்கள் என்று பிரதமர் மோடி கூறினார். பின்னர், அயோத்தி ராமர் கோவிலின் சிலையையும், புனித சரயு நதியின் புனித தீர்த்தத்தையும் டிரினிடாட் அன்ட் டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸெசாருக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

இதையும் படிங்க: இந்தியா விமானத்தை சுட்டு வீழ்த்திய பாக்.,? உளறிக்கொட்டிய கடற்படை கேப்டனால் சிக்கலில் பாஜக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share