×
 

அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... 650 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து... 37 பேர் பலி...!

பேருந்து ஒரு பிக்கப் டிரக் மீது மோதி சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

தெற்கு பெருவில் நடந்த கோர விபத்தில் 37 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

தெற்கு பெருவில் உள்ள அரேக்விபாவில் நடந்த விபத்து, பெருவில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். பெருவை சிலியுடன் இணைக்கும் பனமெரிக்கானா சுர் நெடுஞ்சாலையில் அதிகாலையில் இது நிகழ்ந்துள்ளது.

புதன்கிழமை அதிகாலை தெற்கு பெருவில் பயணிகள் பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 37 பேர் மரணமடைந்ததாகவும் மற்றும் 24 பேர் காயமடைந்ததாகவும் AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING விழுப்புரத்தில் பேரதிர்ச்சி... தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து... 30 பேரின் நிலை என்ன?

லமோசாஸ் என்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா நகரத்திலிருந்து அரேக்விபாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது அதில் சுமார் 60 பயணிகள் இருந்துள்ளனர்.

பேருந்து சாலா நகரத்தை விட்டு வெளியேறி தெற்கு பெருவில் உள்ள சுரங்கப் பகுதியான அரேக்விபா நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, திருப்பத்தில் ஒரு பிக்கப் லாரியுடன் நேருக்கு நேர் மோதிய பின்னர் சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், சுமார் 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காயமடைந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

பெருவில் விபத்துக்கள் ஏற்படுவது வேகம், மோசமான சாலை நிலைமைகள் மற்றும் அதிகாரிகளின் மோசமான மேற்பார்வையிடல் போன்றவைகளால் பொதுவானது. இருப்பினும், புதன்கிழமை நடந்த விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர். ஜூலை மாதம், தலைநகர் லிமாவிலிருந்து பெருவின் அமேசான் பகுதிக்குச் சென்ற மற்றொரு பேருந்து கவிழ்ந்து குறைந்தது 18 பேர் உயிரிழந்ததோடு, 48 பேர் காயமடைந்தனர்.

இதையும் படிங்க: 'சென்னை ஒன்' App-ல் ரூ.1க்கு டிக்கெட்டா..!! பொதுப் போக்குவரத்து பயணம் ரொக்கமின்றி, சொகுசாக.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share