×
 

பாக்.-ன் ‘பொய்யான பரப்புரை’க்கு பலியாகாதீர்கள்.. நெட்டிசன்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

பாகிஸ்தானின் பொய்யான பரப்புரைகளை நம்ப வேண்டாம் என்று நெட்டிசன்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் பொய்யான பரப்புரைகளை நம்ப வேண்டாம், அவ்வாறு தவறான வீடியோக்கள், இந்தியாவுக்கு எதிரான வீடியோக்கள் வலம் வந்தால் அதை ஆய்வுக்கு உட்படுத்தி, மத்திய அரசுக்கு தெரிவியுங்கள் என்று பத்திரிகை தகவல் அமைப்பின் (பிஐபி) உண்மை கண்டறியும் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் உறைவிடங்கள், அலுவலகங்கள், பயிற்சிகூடங்களை குண்டுவீசி அழித்தது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு இந்திய எல்லைஓர மாநிலங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது, ஆனால், அதை இந்திய ராணுவம் முறியடித்தது.

இந்த பதற்றமான நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் சைபர்பிரிவு தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்ப நேரிடலாம். இதைத் தடுக்கும் வகையில் மத்திய தொழில்நுட்ப மற்றும் தகவல்பிரிவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிஐபி விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்..! முப்படை தளபதிகளுடன் ஆலோசிக்கும் ராஜ்நாத் சிங்..!

எக்ஸ் தளத்தில் பிஐபி பதிவிட்ட செய்தியில் “இந்தியாவுக்கு எதிரான, இந்திய ராணுவத்துக்கு எதிரான தவறான கருத்துக்களை கொண்ட வீடியோக்கள், கருத்துக்களை காண நேர்ந்தால், தற்போது நடந்துவரும் பதற்றமான சூழல் குறித்து தவறான கருத்துக்களை காண நேர்ந்தால் உடனடியாக பிஐபி ஃபேக்ட் செக் பிரிவுக்கு தெரிவியுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

மற்றொரு பதிவில் பிஐபி கூறுகையில் “பாகிஸ்தானில் இருக்கும் நீலம்-ஜீலம் நீர்மின்திட்டத்தை இந்திய ராணுவம் குண்டுவீசி அழித்ததாக சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவல் வந்தது. இதை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, அதுபோன்ற எதையும் இந்திய ராணுவம் குறிவைக்கவில்லை, தீவிரவாதிகள் தங்கியிருந்த இடங்களை மட்டுமே அழித்தது என விளக்கம் அளித்தார்” எனத் தெரிவித்தது.

பாகிஸ்தானில் செயல்படும் பல்வேறு சைபர் படையினர், கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், பல நாடுகளின் போர் வீடியோக்களை தங்களின் தேவைக்கு ஏற்றார்போல் மாற்றி, இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். இந்தியாவின் எஸ்-400 ரக விமானத்தை பாகிஸ்தான் ராக்கெட் அழித்துவிட்டதாக வீடியோ வலம் வருகிறது.ஆனால், இந்த வீடியோ உண்மையில் மாஸ்கோவில் எடுக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்டால் செக்டர் பகுதியில் 12 இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் கொண்டதாக பாகிஸ்தான் வீடியோக்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த வீடியோ பொய்யானது, அதில்வரும் உருவங்கள் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என பிஐபி விளக்கியுள்ளது.

இந்திய ராணுவப்பகுதியில் பாகிஸ்தான் புகுந்து தாக்கும் வீடியோ வலம வருகிறது, ஆனால், இது இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டது. இதுபோன்ற பழைய வீடியோக்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு உட்பட்ட சைபர்பிரிவு மறுதிருத்தம் செய்து, மக்களை குழப்பும் நோக்கில் பயன்படுத்துகிறது. எம்ஐ-17வி5 ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்ததாக தகவல் வந்தது. ஆனால், 2019ம் ஆண்டு நடந்த சம்பவத்தை இப்போது திரித்துப் பயன்படுத்துகிறார்கள் என பிஐபி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ட்ரோன் விமானத்தை குஜ்ரன்வாலாவில் இடைமறித்து தாக்கி அழித்ததாக வீடியோ வலம் வருகிறது. இந்த வீடியோவும் பழையது, உக்ரைன் –ரஷ்யா போரில் எடுக்கப்பட்ட விமானத்தை எடிட் செய்து பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய போர்விமானத்தை சுட்டுவீழ்த்தியது போலவும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உடல்களை இந்திய ராணுவம் தவறாக நடத்துவது போலவும், போர்ப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதுபோலவும் சமூக வலைத்தளத்தில்வரும் வீடியோக்கள், புகைப்படங்கள் போலியானவை, சித்தரிக்கப்பட்டவை. இது குறித்து பிஐபியிடம் நெட்டிசன்கள் முறைப்படி தெரிவிக்கலாம். பாகிஸ்தான் சைபர்பிரிவு விரிக்கும் வலையில் இந்திய நெட்டிசன்கள் விழுந்துவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா எங்க சகோதரன்..! பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு.. கொக்காரிக்கும் இஸ்ரேல் வீராங்கனைகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share