×
 

"ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கான Gen Z இளைஞர்கள் உள்ளதால், அரசின் சாதனைகளை அதிகளவில் ரீல்ஸ்களாக பகிர வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழும் 'ஜென் ஜி' (Gen Z) தலைமுறை இளைஞர்களை அதிகளவில் சென்றடையும் வகையில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைக் கவர்ச்சிகரமான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களாக (Instagram Reels) மாற்றித் தீவிரமாகப் பகிர வேண்டும் என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவுறுத்தலை வழங்கி உள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு மக்களையும், குறிப்பாகத் தலைமுறை மாற்றத்தில் இருக்கும் இளைய சமூகத்தையும் சென்றடைகின்றன என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான 'ஜென் ஜி' இளைஞர்கள் மற்றும் இளம் சமூகத்தினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு நீண்ட கட்டுரைகளையோ அல்லது வழக்கமான செய்திகளையோ விட, குறுகிய வடிவிலான வீடியோக்களும் டிஜிட்டல் ரீல்ஸ்களுமே மிக விரைவாகச் சென்று சேர்கின்றன" எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: திமுக GEN Z நிர்வாகி கைது ரத்து..! அதிகாலையில் ARREST.. அதிரடி திருப்பம்..!

தொடர்ந்து பேசிய அவர், ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தொலைநோக்கு நலத்திட்டங்கள், உட்கட்டமைப்பு மாற்றங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுச் சாதனைகளை வெறும் அரசு அறிக்கைகளாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், இன்ஸ்டாகிராமில் இளம் தலைமுறையைக் கவரும் வகையில் ஆக்கப்பூர்வமான ரீல்ஸ்களாகவும், குறும்படங்களாகவும் உருவாக்கி வெளியிட வேண்டும் என அமைச்சர்களுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.

 'ஜென் ஜி' இளைஞர்களின் மொழிக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப அரசுத் துறைகளின் டிஜிட்டல் செயல்பாடுகளை உடனடியாக மேம்படுத்தப் பிரதமர் அளித்த இந்த மாஸ் ஐடியா டெல்லி அரசியல் மற்றும் டிஜிட்டல் மீடியா வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: வணிகங்கள் செழிக்கும், புத்தாக்கம் வளரும்! நியூசிலாந்து வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share