பாகிஸ்தானை அலங்கோலப்படுத்துவோம்... மோடியுடன் கைகோர்த்த அங்கோலா..!
பயங்கரவாதிகள், அவர்களை ஆதரிப்பவர்களுக்கு எதிராக வலுவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
''பயங்கரவாதிகள், அவர்களை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்'' என பிரதமர் மோடி உறுதியாகக் கூறியுள்ளார்.
இன்று அங்கோலா அதிபர் ஜோவா லூரென்கோவுடன் இணைந்து செய்தியாளர் சந்தித்த மோடி,''பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதில் நாங்கள் ஒருமனதாக இருக்கிறோம்'' என்றார். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்த அதிபர் லூரென்கோ, அங்கோலாவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
''பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று இரு நாடுகளும் நம்புகின்றன. பயங்கரவாதிகள், அவர்களை ஆதரிப்பவர்களுக்கு எதிராக வலுவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் அங்கோலாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை பழி எடுக்க முடியாதா..? குறுக்கு வழியில் சிக்கிய இந்தியா... மோடியின் பொறுமைக்கு சோதனை..!
இந்தியாவிற்கும், அங்கோலாவிற்கும் இடையிலான நீண்டகால உறவுகள் உள்ளது. இந்தியாவும், அங்கோலாவும் தங்கள் இராஜதந்திர கூட்டாண்மையின் 40 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன. ஆனாலும், எங்கள் உறவு மிகவும் பழமையானது. அங்கோலா தனது சுதந்திரத்திற்காகப் போராடியபோது, இந்தியா நம்பிக்கையுடனும் நட்புறவுடனும் அதனுடன் நின்றது.
1.4 பில்லியன் இந்தியர்களின் சார்பாக, ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு அங்கோலாவுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி20-க்கு இந்தியா தலைமை தாங்கியபோது ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-ல் நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற்றது எங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்தியாவும் ஆப்பிரிக்க நாடுகளும் ஒன்றாகக் குரல் எழுப்பின. இன்று, உலகளாவிய தெற்கின் நலன்கள், அதன் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளின் குரலாக நாங்கள் ஒன்றாக நிற்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளுடனான எங்கள் ஒத்துழைப்பு வேகம் பெற்றுள்ளது. பரஸ்பர வர்த்தகம் கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஆப்பிரிக்காவில் 17 புதிய தூதரகங்களைத் திறந்துள்ளோம். இதனுடன், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 700 மில்லியன் டாலர் தரைவழி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிபர் லூரென்கோ, அவரது குழுவை வரவேற்கிறேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம். அங்கோலா அதிபர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்துள்ளார். அவரது வருகை இந்தியாவிற்கும், அங்கோலாவிற்கும் இடையிலான உறவுகளுக்கு ஒரு புதிய திசையை வழங்குவது மட்டுமல்லாமல், இந்தியா-ஆப்பிரிக்கா உறவுகளையும் வலுப்படுத்தும்.
அங்கோலாவும் இந்தியாவும் தங்கள் எரிசக்தி உறவுகளை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. அங்கோலாவின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்க 200 மில்லியன் டாலர் பாதுகாப்பு கடன் வழங்குவோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அங்கோலாவின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி அளித்து உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். எங்கள் மேம்பாட்டு கூட்டாண்மையை முன்னோக்கி கொண்டு செல்லும் போது, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டில் அங்கோலாவுடன் எங்கள் திறன்களைப் பகிர்ந்து கொள்வோம்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: பல பேருக்கு இன்று தூக்கம் போயிருக்கும்..! விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் பேச்சு..!