×
 

ஜோர்டான், எத்தியோப்பியாவை தொடர்ந்து ஓமனில் கால்பதித்தார் மோடி! கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்!

ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற, பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் இறுதிக் கட்டமாக, எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் ஓமன் தலைநகர் மஸ்கட்டை சென்றடைந்தார்.

ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சென்றுள்ளார். மஸ்கட் விமான நிலையத்தில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமன் துணைப் பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத் நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். அப்போது ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

மேலும், மேள தாளங்கள் முழங்க, இசைக் கச்சேரி நடத்தி, சிறுவர்கள் பாரம்பரிய நடனங்கள் ஆடி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது "வந்தே மாதரம்", "பாரத் மாதா கி ஜெய்" என்ற கோஷங்களும் எழுந்தன.

இதையும் படிங்க: வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு! நாளை பார்லி.,யில் சிறப்பு விவாதம்! பிரதமர் மோடி உரை!

விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த இந்திய வம்சாவளி மக்களை பிரதமர் மோடி சந்தித்தார். அவர்களுடன் கைகுலுக்கி உரையாடினார். மக்கள் "மோடி ஜி... மோடி ஜி" என உற்சாகக் கோஷம் எழுப்பினர்.

 

Grateful for the warm welcome in Oman. The affection and enthusiasm of the Indian community here truly reflect the enduring people-to-people bonds between India and Oman. pic.twitter.com/nYm1EF7xlK

— Narendra Modi (@narendramodi) December 17, 2025

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். "ஓமன் நாட்டின் மஸ்கட்டில் தரையிறங்கினேன். இது இந்தியாவுடன் நீடித்த நட்பு மற்றும் ஆழமான வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்ட நிலம். இந்த வருகை இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கு புதிய வழிகளை ஆராயவும், கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை சேர்க்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பயணத்தில் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பிரதமர் மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம், கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓமனுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக கடல்வழி வர்த்தகமும் மக்கள் தொடர்பும் உள்ளது. இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இப்பயணம் அமையும்.

இதையும் படிங்க: விடிந்ததும் விஜய்க்கு ஷாக்... தவெக தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி... தெறித்து ஓடிய இளைஞர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share