உலக அரசியலையே புரட்டிப்போட்ட சம்பவம்... ஜப்பானில் மோடி கால் வைத்த அடுத்த நொடியே ஆட்டம் கண்ட வல்லரசு...!
முதலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கு ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜப்பான், சீனாவுக்கு சென்றிருக்கிறார். முதலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கு ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து பிரதமர் மோதி 31 ஆம் தேதி சீனா செல்கிறார். அங்கு ஷங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோதி பங்கு கொள்கிறார். மேலும் சீனா அதிபர் ஜி. ஜிங்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் உட்பட பல்வேறு தலைவர்களை பிரதமர் மோதி சந்திக்கிறார்.
கடந்த ஜூன் 2018 ஜூன் மாதத்தில் சீனாவின் குயின்போ நகரில் நடைபெற்ற எஸ்ஓசி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். கடந்த 2019ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சீனா வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சீனாவுக்கு செல்வதை பிரதமர் மோடி புறக்கணித்தார். இந்த சூழலில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு எஸ்சிபோ மாநாட்டில் பங்கேற்க அவர் சீனாவுக்கு செல்வதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் வர்த்தகப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியா, ஜப்பான், சீனா, ரஷ்யா உலிட்ட நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தால் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். இந்த நிலையில்தான் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் புதியதொரு டிஜிட்டல் நாணயத்தை 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன. பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தினமும் ரூ.700 கோடி வரை இழப்பு - ட்ரம்ப் அறிவிப்பால் திணறும் திருப்பூர்... பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேதனை...!
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் புதியதொரு டிஜிட்டல் நாணயத்தை 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன. பிரிக்ஸ் நாடுகள் தான் ஏற்கனவே உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் டாலரை கைவிட்டால் அது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்கும். கடந்த 2023 ஆம் வருடம் நடந்த கூட்டத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஆறு புதிய நாடுகளை சேர்த்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்து கொள்ள உள்ளது. இதில் கவனிக்க வேண்டியது எண்ணை வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும். இதனால் உலக அரசியலே மாறும். டொனால்ட் ட்ரம்ப் இந்திய பொருட்களின் மீது 50% வரிவிதித்ததற்குபிறகு இந்த கொள்கை அறிவிக்கப்பட்டது.
இந்திய ரூபாயை வலுபடுத்தும் இம்முயற்சி அமெரிக்க வர்த்தக கொள்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு நேரடி பதிலடியாகவே பார்க்கிறது. பிரிக்ஸ் நாடுகளுடன் மட்டுமல்லாமல் இந்திய ரூபாயில் நேரடியாக பணம் செலுத்தும் வாய்ப்பை வழங்கும் சுற்றறிக்கையை இந்தியா பல நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது. இது இந்தியாவின் சர்வதேச வர்த்தக நிலையில் முக்கிய பங்காற்றுவதோடு உலகச் சந்தைகளில் டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜப்பானில் பிரதமர் மோடி.. முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது..!!