புதிய அரசுக்கு நெருக்கடி..! பி.எம். ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போடுங்க..! மத்திய அரசு கடிதம்..!!
பி எம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா (PM SHRI) திட்டம், நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 14,500 பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாடு, புத்தாக்க கற்றல் முறைகள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றின் மூலம் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதாக மத்திய அரசு விளக்குகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் முன்பு இருந்த திமுக தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை தொடர்ந்து மறுத்து வந்தது. மத்திய-மாநில உறவுகளில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்பதில் திட்டவட்டமாக இருந்து வந்தது திமுக.
இந்த நிலையில், பிஎம் ஶ்ரீ திட்டத்தை செயல்படுத்துமாறு மத்திய அரசு சார்பில் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு தங்களது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. தற்போது தமிழகத்தில் புதிய அரசு அமைய உள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!
பி எம் ஸ்ரீ திட்டத்தில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் எனும் நிபந்தனை இருப்பதால் அதனை ஏற்க திமுக அரசு மறுத்திருந்தது. முன்மொழி கொள்கையை ஏற்க முடியாது எனக் கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட திமுக அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில் பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: விசிலோடு சேர்ந்த கை..! விஜயை சந்தித்து முழு ஆதரவை கொடுத்த காங்கிரசார்..!!