×
 

நேரில் ஆஜரான அன்புமணி... காணொலியில் ராமதாஸ் - நீதிபதி முன்பு நடந்தது என்ன?

பொதுக்குழு தொடர்பான வழக்கில் அன்புமணி, ராமதாஸ் இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்னவென பார்க்கலாம்.

மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். இதை எதிர்த்து அவரது தந்தை ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் முரளி சங்கர் தொடுத்த இந்த வழக்கில், அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவிக்காலம் கடந்த மே மாதம் 22-ஆம் தேதியே முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அவர் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது சட்டவிரோதம் என்றும் கூறியிருந்தார். மேலும் பொதுக்குழுவை கூட்டுவதற்கான அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு தான் இருப்பதாக அந்த வழக்கில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாலை 5.30 மணிக்கு அன்புமணி ராமதாஸ், அவரது தந்தை ராமதாஸ் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவர் ராமதாஸ் காணொளி வாயிலாக வழக்கு விசாரணையின் போது ஆஜரானார்.

இதையும் படிங்க: ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வர மாட்டாராம்! நீதிபதிக்கே கடிதம் எழுதிய விவகாரம்...

டாக்டர் ராமதாஸ் தரப்பு இந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். அதே நேரத்தில் அன்புமணி தரப்பில் நாங்கள் சட்டப்படி அதாவது கட்சியினுடைய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்த பொதுக்குழுவை கூட்டுகிறோம். எனவே இந்த பொதுக்குழுவை தடை செய்வதற்கு யாருக்கும் விதிகளின் படி அனுமதி கிடையாது. எனவே விதிகள் படி நடைபெறக்கூடிய இந்த பொதுக்குழுவிற்கு நீதிமன்றம் தடைவிதிக்க கூடாது என்ற கோரிக்கையைவைத்திருந்தார்கள்.

 எனவே அந்த அடிப்படையிலே தற்போது எந்தவிதமான ஒரு தீர்ப்பும் வழங்கப்படவில்லை. எனவே நாளை திட்டமிட்டபடி அன்புமணி அழைத்திருந்த அந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவர்கள் தரப்பில் சொல்லப்படுகின்றது. ஏனென்றால் நீதிமன்றம் இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவில்லை. தடை விதிக்கவில்லை என்றால் இந்த பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தி கொள்ளலாம் என்பது பொருள். எனவே அந்த அடிப்படையிலே நாங்கள் நாளை பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்று அன்புமணி தரப்பிலே தெரிவித்திருக்கின்றார்கள். 

எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரையிலே வெளிப்படையாக எந்த ஒரு தீர்ப்பும் சொல்லவில்லை என்றாலும் கூட அன்புமணி நாளை திட்டமிட்டபடியே மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை நடத்த இருக்கின்றார். எனவே அந்த பொதுக்குழுவிலே என்ன மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றது, யாருக்கு புதிதாக பதவி கொடுக்க இருக்கின்றார்கள்? அல்லது பதவி நீட்டிப்பு போன்றவை நடைபெற இருக்கிறதா என்பதை எல்லாம் நாம் நாளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 
 

இதையும் படிங்க: பாமக நலன் முக்கியமில்லையா? அன்புமணி, ராமதாஸ் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share