×
 

ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட நட்சத்திர ஆமைகள்.. மடக்கி பிடித்த போலீசார்..!

சென்னையில் ஆட்டோ மூலம் கடத்திச் செல்லப்பட்ட 211 நட்சத்திர ஆமைகளை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சார் பறிமுதல் செய்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் தலைமைச் செயலகம் செல்லும் சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இணங்க ஆட்டோ ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. இதனை கவனித்த போலீசார் ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் ஆட்டோ ஓட்டுனர் நான் தான் பகுதியை சேர்ந்த யாஸீன் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து யாசனிடம் போலீஸ் ஆர் விசாரணை மேற்கொண்ட நிலையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து 211 நட்சத்திர ஆமைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் ஆட்டோ ஓட்டுநர் யாஸ்னிடம் விசாரணை மேற்கொண்டதில், ராமாபுரத்தில் இருவர் இதனை எடுத்துச் செல்லுமாறும், பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் நாங்கள் வருகிறோம் என்று மர்ம நபர்கள் தெரிவித்துள்ளதாக வாக்குமூலம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய மாணவரை அமெரிக்காவிலிருந்து அனுப்பத் தடை.. ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

 இந்த சம்பவம் குறித்து சிஎஸ்ஆர் பதிவு செய்த கோட்டை போலீஸ் ஆர் சென்னை கிண்டியில் உள்ள வன குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரியிடம் 211 நட்சத்திர ஆமைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனரின் செல்போனை ஒப்படைத்தனர்.
 தொடர்ந்து நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்தது மற்றும் இரு சக்கர வாகனத்தில் பின்பற்றிய மர்ம நபர்கள் யார் என்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: கனிமவளம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற லாரி.. இரண்டாவது நாளாக பொதுமக்கள் போராட்டம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share