முடிவு வரட்டும்... அப்ப இருக்கு... கரூர் சம்பவம் குறித்து பொன்முடி ஆவேசம்...!
கரூர் சம்பவம் தொடர்பாக தனிநபர் ஆணையத்தின் முடிவு வந்தவுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கரூர் சம்பவம், 2025 செப்டம்பர் 27 அன்று நிகழ்ந்தது. தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் மற்றும் நடிகர் விஜய் நடத்திய அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விஜயின் பிரச்சாரத்திற்கு 10,000 பேர் என்று எதிர்பார்த்த கூட்டம் 27,000-ஐத் தாண்டியது. விஜய்யின் பேச்சின் போது, திடீர் நெரிசல் ஏற்பட்டது.
இந்தப் பயங்கர சம்பவம், கூட்ட மேலாண்மை, பாதுகாப்பு இன்னும் பல சிக்கல்களை வெளிப்படுத்தியது. இதன் தாக்கத்தைத் தீர்க்க, தமிழ்நாடு அரசு அமைத்த தனிநபர் ஆணையம், சம்பவத்தின் காரணங்களை ஆழமாக விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆணையம் அமைக்கப்பட்ட அடுத்த நாளே, செப்டம்பர் 28 அன்று, ஜஸ்டிஸ் அருணா ஜகதீசன் விசாரணையைத் தொடங்கினார். முதல் படியாக, சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் இடத்தை நேரில் பார்வையிட்டார். அங்கு, கூட்ட நெரிசலின் அளவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், போலீஸ் பாதுகாப்பின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, இந்த ஆணையம் குறைபாடுகளை அடையாளம் காணும். தேவையான சரிசெய்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம் எதிரொலி… தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்…!
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஒரு நபர் ஆணையம் நடத்திவரும் விசாரணை முடிந்த பிறகு கரூர் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: சம்பவம் நடந்ததும் விஜய் எதுக்கு ஓடி ஒளியணும் ? ஆ.ராசா சாடல்...!