×
 

குடியுரிமை நோக்கத்துடன் விசா கேட்டால் விண்ணப்பங்கள் ரத்து! - அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!

அமெரிக்காவில் குழந்தை பெற்றெடுத்தால் குடியுரிமை பெறலாம் என்ற எண்ணத்தோடு சுற்றுலா விசாவிற்கு அணுகினால் அதிகாரிகள் நிராகரிப்பார்கள்  என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் குழந்தை பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் (Birthright Citizenship) என்ற நோக்கத்தோடு, இந்தியப் பெண்கள் சுற்றுலா விசா (Tourist Visa) கேட்டு விண்ணப்பித்தால், அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும் என்று இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் தானாகவே குடியுரிமை கிடைக்கும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இந்தப் பிரிவைச் சிலர் தவறாகப் பயன்படுத்தி, பிரசவத்துக்காகவே அமெரிக்காவுக்குச் சுற்றுலா விசா பெற்றுச் செல்லும் 'குழந்தை பிறப்பு சுற்றுலா' (Birth Tourism) என்ற நடைமுறை பரவலாகக் காணப்படுகிறது.

இந்த முறைகேட்டைத் தவிர்க்கும் நோக்கில், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் குழந்தை பெற்றெடுத்தால் அமெரிக்கக் குடியுரிமை பெறலாம் என்ற எண்ணத்தோடு சுற்றுலா விசாவிற்கு அணுகினால், விசா விண்ணப்பங்கள் அதிகாரிகளால் நிராகரிக்கப்படும்.

இதையும் படிங்க: "அமெரிக்காவுக்கு உரிமை இருக்கும்போது இந்தியாவுக்கு ஏன் தடை? ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புதின் கேள்வி!

சுற்றுலா விசாவின் அடிப்படை நோக்கம், தற்காலிகமாகச் சுற்றுலா செல்வது அல்லது சிகிச்சை பெறுவது மட்டுமே ஆகும். குடியுரிமை பெறும் நோக்கத்திற்காக இந்த விசாவைப் பயன்படுத்துவது விசா விதிமுறைகளை மீறுவதாகும் என்று தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களிடம் அல்லது குறுகிய காலத்தில் அமெரிக்காவில் அதிக நாட்கள் தங்கியிருக்கத் திட்டமிடும் பெண்களிடம், அவர்களின் பயண நோக்கம் குறித்து விசா அதிகாரிகள் கடுமையான கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொள்வார்கள். விசா விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் நோக்கம் கண்டறியப்பட்டால், அந்த விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும்.

இந்தியாவில் உள்ள விண்ணப்பதாரர்கள், விசா வழங்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும் என்று அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெடித்து சிதறிய F16 போர் விமானம்..!! பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share