×
 

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த டிரம்ப்... முதல் டார்கெட்டே சீனா தான்... அமெரிக்கா எடுத்த ராட்சத முடிவு...!

நவம்பர் 1 முதல் சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என ஆசை ஆசையாக காத்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஏமாற்றமே பிஞ்சியுள்ளது. இதனால் கடுப்பான டிரம்ப் தனது வர்த்தக போரை அதிதீவிரப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இந்தியா, தைவான், ஜப்பான், சீனா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு இறக்குமதி வரி விதித்த டொனால்ட் டிரம்ப் தற்போது மீண்டும் சீனாவிற்கு 100 சதவீத வரி விதித்து பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். 

தனது சோசியல் மீடியா பதிவில் டிரம்ப் கூறியிருப்பதாவது:  “நவம்பர் 1 முதல் சீனாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கவிருக்கிறோம். உலகின் மீதான மிக விரோதமான நடவடிக்கையாக சீனா நடந்துகொள்கிறது. இதனால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் மின்சாதன உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருந்தாலும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எதிர்கொள்வோம். 

“சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள் சர்வதேச வர்த்தக வரலாற்றில் கேள்விப்படாதவையாகும். இது பிற நாடுகளுக்கு எதிரான ஒரு தார்மீக அவமானம். எனவே, நவம்பர் 1 முதல் சீனாவுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும். முக்கியமான மென்பொருட்களின் ஏற்றுமதியிலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்” எனக்குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: முடிவுக்கு வரும் காசா போர்..?? டிரம்ப் சொன்ன விஷயம் என்ன..??

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பு, உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் படிங்க: அதிபர் டிரம்ப்பின் அடுத்த மூவ்..! இறக்குமதியாகும் லாரிகளுக்கு 25% வரியாம்..!! அமெரிக்க உற்பத்தியை பாதுகாக்கும் புதிய அடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share