பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தையே கிடையாது! உக்ரைன் போரில் புடினின் அதிரடி எச்சரிக்கை!
உக்ரைனின் முக்கிய நகரங்களை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக புடின் கூறியுள்ள நிலையில், அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பது சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் படைகள் விரைவில் பலவீனமடைந்து சிதைந்து போகும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தொடர்பான போரின் தற்போதைய நிலை குறித்து பேசிய புடின், ரஷ்ய படைகள் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவ வீரர்களின் திறன் குறித்து தனக்கு சந்தேகம் இல்லை என்றும், ஆனால் போரின் போக்கு தங்களுக்கு சாதகமாக மாறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 270 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிரமாடஸ்க் நகரங்களை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!
இதற்கிடையே, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து கடுமையான தாக்குதல்களை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகவும் புடின் தெரிவித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
போருக்கு மத்தியில் பேச்சுவார்த்தை தொடர்பாகவும் புடின் கருத்து தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று அவர் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதேநேரத்தில், உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ரஷ்யா எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் இந்த இரட்டை நிலைப்பாடு தற்போது கவனம் பெற்றுள்ளது. ஒருபுறம் போர்க்களத்தில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதாக தெரிவிக்கும் ரஷ்யா, மறுபுறம் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறுகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக புடின் கூறியுள்ள நிலையில், அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பது சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. போர் நீடிக்கும் சூழலில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்குமா அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!