×
 

ட்ரம்புக்கு ஆப்பு வைத்த புடின்! செயற்கை சுனாமியை உருவாக்கும் அணு ஆயுதம்! ரஷ்யாவின் கடல் அரக்கன்!

அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.

உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளைத் தாண்டியுள்ள நிலையில், ரஷ்யா தனது அணு சக்தி ஏவுகணை 'புரெவெஸ்ட்னிக்' சோதனையை வெற்றிகரமாக முடித்திருந்தது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யா இப்போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இந்தச் சோதனை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யாவின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உக்ரைன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், ரஷ்யா தனது அணுசக்தி ஏவுகணை 'புரெவெஸ்ட்னிக்' சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த சோதனை தேவையில்லாதது என்று அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யா இப்போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதனை செய்தது. இதை அந்நாட்டு அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

இந்தச் சோதனை குறித்து அதிபர் புடின் கூறியதாவது: அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோன் 'போஸிடான் சூப்பர் டார்பிடோ' வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ட்ரோன் ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையை விட தாக்கும் திறன் கொண்டது. பெரிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட போஸிடான் நீர்மூழ்கி ட்ரோனில், சாதாரண அணு உலையைப் போல் 100 மடங்கு சிறிய அணு சக்தி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் திருமண மண்டபம்… முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…!

கிரேக்க புராணங்களின் கடல் கடவுளான போஸிடானின் பெயரிடப்பட்ட இந்த ஆயுதம் எதிரி ரேடார்களை ஏமாற்றும். போஸிடான் ட்ரோனுக்கு நிகரானது எதுவுமில்லை. அதை நிறுத்துவது சாத்தியமற்றது. ட்ரோனில் பொருத்தப்பட்ட அணு ஆயுதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை விட சக்தி வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சோதனை முயற்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் பதற்றத்தை அதிகரிக்கும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வெடித்து கதிரியக்க சுனாமியை உருவாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதத்துடன் போஸிடான் கட்டமைக்கப்பட்டுள்ளதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போஸிடான் ட்ரோன், 20 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் விட்டம் கொண்டது. இது 100 டன் எடை கொண்டது. இது 2 மெகாடன் வெடி திறன் கொண்டது. திரவ உலோகம் குளிரூட்டப்பட்ட ரியாக்டரால் இயங்குகிறது. இது 200 கிமீ/மணி வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இது ஏதேனும் ஒரு கண்டத்தை அழிக்கும் அளவு சக்தி வாய்ந்தது. இந்தச் சோதனை அக்டோபர் 28 அன்று நடைபெற்றது. இது ரஷ்யாவின் அணு ஆயுத முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: “அனைத்து சமுதாய மக்களும் இதை செய்ய வேண்டும்...” - தேவர் நினைவிடத்தில் இருந்து கோரிக்கை விடுத்த சி.பி.ராதாகிருஷ்ணன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share