×
 

#BREAKING விடிந்ததுமே ஷாக்... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு...!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்  மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று ஒரு படகில் சென்ற 5 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி  இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலில் இறங்கி மீன்பிடிக்கும் மீன்வர்கள், இயற்கை சீற்றங்களால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே ஏராளம். மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் நடுக்கடலில் சிக்கித் தவிப்பதும், மீன் கிடைக்காமல் கரைக்கு திரும்பும் சூழ்நிலையும் ஏற்படுவது உண்டு. மேலும் அவ்வப்போது காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகள் காரணமாக நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் தவறான திசைக்கு இழுத்துச் செல்லப்படுவது உண்டு. அப்படி தெரியாமல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது. 

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்  மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று ஒரு படகில் சென்ற 5 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி  இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தனுஷ்கோடி தலைமன்னார் இடையே  மீன் பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டி ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 5 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது

தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின்  கைது நடவடிக்கையால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாகவே இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது குறி வைத்து கைது நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. கடந்த மாதம் பிப்ரவரி 16ம் தேதி அன்று, எல்லைத்தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக இலங்கை கடற்படை 25 காரைக்கால் மீனவர்களையும், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. அதனையடுத்து பிப்ரவரி 19ம் தேதி அன்று,  ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் 22 பேரையும் அவர்களது 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். மேலும் பிப்ரவரி 23ம் தேதி பாம்பன் மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... தமிழக மீனவர்கள் 12 பேர் கைது... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்...!!

இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே அதிர்ச்சி... நடுக்கடலில் 25 மீனவர்கள் சுற்றி வளைத்து கைது... இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share