×
 

மூண்டது கம்போடியா Vs தாய்லாந்து போர் - உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள் - காரணம் என்ன?

தாய்லாந்துல இருக்கக்கூடிய சுரின் அப்படிங்கிற மாகாணமும், கம்போடியாவோட ஒட்டார் மீன் அப்படிங்கிற மாகாணமும் ரெண்டு நாட்டோட எல்லையில அமைஞ்சிருக்கு. 

இஸ்ரேல் ஈரான் போர் தற்காலிகமாக முடிஞ்சு உலகம் ஒரு அமைதியை நோக்கி வந்து கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் அடுத்த போர் வெடிச்சிருக்குது. தாய்லாந்த் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு எல்லையில் இருக்கக்கூடிய சிவன் கோவில் தொடர்பாக ரெண்டு நாடுகளுக்கு இடையில் பல வருஷமாக பிரச்சனை நீடிச்சிட்டு வந்தது. இந்த பிரச்சனை இப்போ ரெண்டு நாடுகளுக்கு இடையிலான மோதலாக உருவெடுத்திருக்கு. தாய்லாந்துல இருக்கக்கூடிய சுரின் அப்படிங்கிற மாகாணமும், கம்போடியாவோட ஒட்டார் மீன் அப்படிங்கிற மாகாணமும் ரெண்டு நாட்டோட எல்லையில அமைஞ்சிருக்கு. 

இந்த சுரின் மாகாணத்தில் இருக்கும் தாமுயன்தாம் அப்படிங்கிற கோயிலுக்கு ரெண்டு நாடுகளுமே பரஸ்பர உரிமை கோரி வருகிறார்கள். இந்த விஷயத்துல ரெண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனை வெடிச்சிருக்கு. ஜூலை 23 ஆம் தேதி கன்னிடி வெடித்ததில் தாய்லந்து ராணுவ வீரர்கள் அஞ்சு பேர் காயமடைஞ்சிருக்கறாங்க, இதை தொடர்ந்து தாய்லாந்த் சார்பில் எல்லையில போர் விமானங்களை குவிச்சிருக்கறாங்க. ரெண்டு நாட்டு ராணுவ வீரர்களும் மாறி மாறி தாக்குதல் நடத்திட்டு இருக்காங்க. இதுல ரெண்டு தரப்பிலையும் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கம்போடியா ராணுவ வீரர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தின பிறகுதான் மோதல் வெடிச்சது என தாய்லாந்து குற்றச்சாட்டியுள்ளது. 

ரெண்டு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், ரெண்டு நாடுகளும் தங்களோட எல்லையை மூடியுள்ளன. அதுமட்டுமில்லாமல் தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் இருக்கக்கூடிய தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு மக்களை மீட்டு தங்களுடைய நாட்டுக்கு அனுப்புறதுக்கு நடவடிக்கை எடுத்துட்டு வராங்க. ரெண்டு நாடுகளுமே மோதலை கைவிடணும்னு ஐனா தெரிவிச்சிருந்தாலும் பதற்றம் குறையாததுனால ரெண்டு நாட்டு மக்கள் எல்லைகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 

இதையும் படிங்க: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!

எல்லையிலிருந்து ஒரு லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறதாகவும் 300 முகாம்கள்ல தங்க வைக்கப்பட்டிருக்கிறதாகவும் தாய்லாந்து உள் விவகாரத்தத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே மாதிரி கம்போடியாவிலும் 30 கிலோ மீட்டர் சுற்றளவில இருந்த மக்கள் வெளியேறி அரசு ஏற்பாடு பண்ணி இருக்கக்கூடிய முகாம்களை நோக்கி படையெடுத்துட்டு இருக்காங்க. இந்த சூழலில் தாய்லாந்து நாட்டில் இருக்கக்கூடிய உபோன் ரட்சதானி, பிரசாத் தாமுயன் தோம்ம், சிசாக்கெட், சோன்சாங் பிரக்யா பகுதிகளுக்கும் பாண்டலை மற்றும் பான் பாட் காட் இந்த பகுதிகளுக்கு எல்லாமே இந்தியர்கள் போக வேண்டாம் அப்படின்னு இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share