ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? ஆர்பிஐ ஆளுநர் கொடுத்த முக்கிய தகவல்...!
ரெப்போ வட்டி விகிதம் தொடர்பாக முக்கிய தகவலை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தனது பணவியல் கொள்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீராக வைத்திருக்கிறது. இதில் ரெப்போ வட்டி விகிதம் ஒரு முக்கியமான கருவியாகத் திகழ்கிறது. ரெப்போ வட்டி விகிதம் என்பது RBI தனது குறுகிய கால கடன்களை வணிக வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தைக் குறிக்கிறது. இது வெறும் ஒரு எண்ணுக்கும் மேல், இந்தியாவின் பணப்புழக்கம், பணவீக்கம், வளர்ச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி.
2025-ஆம் ஆண்டின் அக்டோபர் 1-ஆம் தேதி நிலவரப்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உள்ளது. இது 2025 ஜூன் 6-ஆம் தேதி RBI-யின் பணவியல் கொள்கை குழு கூட்டத்தில் 50 பேசிஸ் பாயிண்டுகள் குறைக்கப்பட்டதன் விளைவு. அதற்கு முன், ஏப்ரல் 9-ஆம் தேதி 6.25% இலிருந்து 6% ஆகக் குறைக்கப்பட்டது.
இந்தத் தொடர் குறைப்புகள், பணவீக்கம் குறைந்து வருவதையும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் குறிக்கின்றன. RBI இந்த விகிதத்தை ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை மதிப்பீடு செய்து மாற்றுகிறது,
இதையும் படிங்க: ஆசிய கோப்பை வேணுமா? அப்போ இத பண்ணுங்க! பாக்., அமைச்சர் நிபந்தனை! BCCI தரமான ரிப்ளை!
இந்த நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். 5.5% தொடர ரிசர்வ் வங்கியின் நிதி குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீட்டுக்கடன், வாகனக்கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நிறுவனங்கள்! இந்தியா நோக்கி படையெடுப்பு! மோடி மேஜிக்!