பயத்தை போக்க இபிஎஸ் போட்ட மேக்கப் தான் பொதுக்குழு கூட்டம்... R.S பாரதி விமர்சனம்...!
எடப்பாடி பழனிசாமியின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்கள் படுதோல்வியை பரிசாக தருவார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு என்றும் மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது போல மாப்பிள்ளை பழனிசாமிதான்., ஆனால், அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழுவில், அதிகாரம் என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள் என்றும் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் மத்திய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட போலி விவசாயி எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை என்று கூறியுள்ளார்.
10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள் என கூறினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமுகவாக மாறி விட்டதை மறைக்க முயற்சித்தாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பாஜகவின் அடிமை பழனிசாமி என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையிலேயே உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: கார் குண்டு வெடித்த இடத்துக்கு 20 நிமிடத்தில் அமித் ஷா சென்றது எப்படி? - பதில் சொல்லுங்க எடப்பாடி ... பகீர் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி...!
அதிமுகவினர் மத்தியில் டான்? போல காட்டும் எடப்பாடி பழனிச்சாமி டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும் என்று விமர்சித்துள்ளார். மெகா கூட்டணி அமைப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமியை நம்பி எந்த கட்சியும் வர தயாராக இல்லை என்றும் 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு எந்த ஆளுமையும் இல்லை., மக்கள் செல்வாக்கும் கிடையாது என்பது தெள்ளத்தெளிவாக உணர்ந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணியை அவரே அறிவித்தார் என்பதுதானே நிஜம் என்று கூறினார்.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துவரும் வளர்ச்சியை தினந்தோறும் பார்த்து வயிற்றெரிச்சலில் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி, போகின்ற இடங்களிலெல்லாம் புலம்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார் என்றும் அதையே அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களாகவும் வடித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொந்த காசியில் சூனியம் வைத்துக் கொண்ட திமுக... பென் டீம் கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்... ஸ்டாலின் தலையில் இடியை இறக்கிய சர்வே...!