×
 
☰

ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ரஷ்ய சுகாதார அதிகாரிகள் அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றும், நிமோனியா தொடர்பான பாதிப்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஆய்வக ஊழியர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு பிளேக் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் விரைவில் தொலைபேசியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் செயல்பட்டு வரும் பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயதான பெண் ஆய்வக ஊழியர் ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: ரஷ்யாவில் பிளேக் பீதி! சைபீரியாவில் மர்ம நிமோனியா! ஆய்வக பெண் ஊழியர் மரணம்! அலர்ட் ஆனது அமெரிக்கா!

அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு, ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் பிளேக் கிருமி தாக்கம் காரணமாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. எனினும், இதுவரை அவர் பிளேக் நோயால் உயிரிழந்தார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

ரஷ்ய சுகாதார அதிகாரிகள் அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றும், நிமோனியா தொடர்பான பாதிப்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சிலர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை மற்றும் அரசு அமைப்புகள் தீவிரமாக தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்தார். ரஷ்யாவுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புடினுடன் விரைவில் பேச இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு, ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள சம்பவத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போதைய தகவல்களின் அடிப்படையில், பொதுமக்களுக்கு ஏற்படும் சர்வதேச சுகாதார அபாயம் குறைவாகவே இருப்பதாக WHO மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், பிளேக் நோய் உறுதி செய்யப்பட வேண்டுமெனில் ஆய்வக பரிசோதனை அவசியம் என்றும் WHO தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பிளைதுபாய் விமானத்தில் கத்திக்குத்து! எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை! ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share