×
 

உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து தாக்குதல்! அமைதி பேச்சுவார்த்தை என்னாச்சு?! ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்!

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 33 பேர் கடந்த வாரம் பலியான நிலையில், நேற்று மீண்டும் நடந்த தாக்குதலில் 4 பேர் பலியான சம்பவம் உக்ரைனில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாகத் தொடர்கிறது. இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டும், சமரசப் பேச்சுகள் தோல்வியடைந்தும், பதற்றம் நீடிக்கிறது. உக்ரைன் சொந்தப் பகுதிகள் ரஷ்யா வசம் வந்துள்ளதாக ரஷ்யா கூறுவதை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைதி முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

கடந்த வாரம் உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் குழந்தைகள். மேலும் 6 பேர் காணாமல் போனதாகவும், பல குடியிருப்பு கட்டடங்கள் அழிந்ததாகவும் உக்ரைன் தெரிவித்தது. 

இந்த சோகத்தில் இருந்தும், நேற்று (நவம்பர் 24) உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்யப் படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தின. இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். குடியிருப்புப் பகுதிகளில் நடந்த இந்தத் தாக்குதலால் பல கட்டடங்கள் பெரும் சேதம் அடைந்தன. கார்கிவ் மேயர் இகோர் டெபெகின், “இது பெரிய அளவிலான தாக்குதல்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பலே ஐடியா!! உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த ட்ரம்ப் யோசனை! 28 அம்ச திட்டம் அறிவிப்பு!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்தத் தாக்குதலை கண்டித்து, “எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம். ரஷ்யாவின் அத்துமீறல் இன்னும் தொடர்கிறது. அவர்களின் அநியாய தாக்குதலில் உக்ரைனின் அப்பாவி மக்கள் மடிகின்றனர். இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தார். ரஷ்யா தாக்குதலை நிறுத்துவதற்கான அறிகுறி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உக்ரைனின் கார்கிவ் நகரம், ரஷ்ய எல்லையில் அருகில் உள்ளதால், தொடர்ந்து தாக்குதல்களுக்கு இலக்காகிறது. கடந்த சில மாதங்களில் இந்தப் பகுதியில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும், இரு தரப்பும் சமரசத்துக்கு வராத நிலையில், உக்ரைனில் சோகம் நீடிக்கிறது. அமெரிக்காவின் அமைதி முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. உலக நாடுகள் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஊடுருவ வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
 

இதையும் படிங்க: 100 ரபேல் விமானத்துக்கு டீல்!! பிரான்ஸிடம் பிசினஸ் பேசும் உக்ரைன்!! ரஷ்யா உதறல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share