7 போரை நிறுத்திட்டேன்!! இதுமட்டும் கஷ்டமாயிருக்கு!! அதிபர் ட்ரம்ப் ஓபன் டாக்!!
உலகில் 7 போர்களை நிறுத்திய எனக்கு, ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகம் முழுக்க ஏழு போர்களை நிறுத்திய பெருமையைப் பேசிக்கொண்டாலும், ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்துல மட்டும் அவருக்கு தலைவலி தாங்க முடியலையாம்! இந்தப் போரை எப்படியாவது நிறுத்தணும்னு முழு முனைப்போட பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும், இன்னும் தீர்வு கிடைக்கலையாம். இதைப் பத்தி ட்ரம்ப் இப்போ வெளிப்படையா பேசியிருக்காரு. “நான் ஏழு போர்களை நிறுத்திட்டேன், ஆனா இந்த ரஷ்யா-உக்ரைன் விவகாரம் மட்டும் ரொம்ப கஷ்டமா இருக்கு”னு அவர் சொல்லியிருக்காரு.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலே பொறி தெறிக்கிற மாதிரி சூழ்நிலை இருக்கு. இதை ட்ரம்ப் தன்னோட பேச்சுல தெளிவா சொல்லியிருக்காரு. “இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து பேசுவாங்களானு பார்க்கிறோம். ஆனா, வெளிப்படையா சொல்லணும்னா, இவங்களுக்கு இடையில நல்ல பழக்கம் இல்லை. இவங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்துல உட்கார வைக்கணுமா, இல்லையானு பின்னாடி முடிவு பண்ணுவோம்”னு ட்ரம்ப் கமென்ட் அடிச்சிருக்காரு.
“நான் விரும்புறது ஒண்ணு மட்டும்தான். புடினும், ஜெலன்ஸ்கியும் ஒரு மேசையில உட்கார்ந்து பேசணும். ஆனா, இவங்க ரெண்டு பேரும் தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டு, மக்களைக் கொல்றாங்க. இது ரொம்ப முட்டாள்தனமான விஷயம்”னு ட்ரம்ப் ஆதங்கப்பட்டிருக்காரு. இந்தப் போர் 2022-ல ஆரம்பிச்சதுல இருந்து உலகமே கவனிச்சுக்கிட்டு இருக்கு. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, மில்லியன் கணக்குல மக்கள் வீடு வாசலை விட்டு ஓடிப்போய் அகதிகளா மாறியிருக்காங்க. இந்த சூழ்நிலையில, ட்ரம்ப் இந்தப் போரை நிறுத்துறதுக்கு முழு முயற்சியும் எடுத்துக்கிட்டு இருக்காரு.
இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போர் தொடர இந்தியாவே காரணம்!! டிரம்ப் ஆலோசகர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
ட்ரம்போட இந்த முயற்சி எல்லாம் உலக அரசியலில் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கு. “நான் ஏழு போர்களை நிறுத்தியிருக்கேன். இதையும் நிறுத்தணும்னு ஆசைப்படுறேன். ஆனா, இது ரொம்ப கடினமா இருக்கு”னு அவர் சொல்லும்போது, இந்தப் பிரச்சினையோட சிக்கல் எவ்வளவு ஆழமானதுனு தெரியுது. ரஷ்யாவும் உக்ரைனும் தங்களோட நிலைப்பாட்டுல இருந்து இன்ச் கூட இறங்காம இருக்காங்க. புடின், உக்ரைனோட சில பகுதிகளை தன்னோட கட்டுப்பாட்டுல வைச்சிருக்காரு. ஜெலன்ஸ்கி, தன்னோட நாட்டோட முழு இறையாண்மையை மீட்கணும்னு உறுதியா இருக்காரு.
இந்த சூழல்ல, ட்ரம்ப் இவங்க ரெண்டு பேரையும் ஒரு மேசையில உட்கார வைக்க முயற்சி பண்ணுறது பெரிய விஷயம்தான். ஆனா, இந்தப் பேச்சுவார்த்தை சுலபமா நடக்குற மாதிரி தெரியல. உலக நாடுகள் எல்லாம் இந்தப் போரோட பாதிப்பை உணர்ந்து, ஒரு தீர்வு வரணும்னு எதிர்பார்க்குது. ட்ரம்ப் சொல்ற மாதிரி, இந்தப் போர் “முட்டாள்தனமானது”னு உலகமே ஒத்துக்குது. ஆனாலும், இந்த முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவு காணுறது எவ்வளவு கஷ்டம்னு ட்ரம்போட இந்த பேச்சு காட்டுது.
இதையும் படிங்க: பாக்., கெஞ்சுனதுக்கு காரணம் ட்ரம்ப் இல்லை!! இந்தியா கொடுத்த அடி அப்பிடி!!