×
 

போரில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பிடம் கட் அன் ரைட்டாக பேசிய புடின்! சிக்கலில் உக்ரைன்..!

உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைபேசியில் பேசியபோது அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இந்தப் போரில் ரஷியாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் ஆயுத, தளவாடங்களை அனுப்பி உதவின.

சமீபத்தில் ரஷ்ய எல்லைக்குள் சென்று உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலால், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்தும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் போர் நீடிக்கிறது. 

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக ஒரே இரவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உட்பட மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ரஷ்யா வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். உக்ரைன் போர் விமானத்தின் விமானி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: உக்ரைனை கைவிட்டது அமெரிக்கா!! தனித்து விடப்பட்ட ஜெலன்ஸ்கி.. ஆட்டத்தை துவங்கும் புடின்..!

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கிட்டத்தட்ட இரவு முழுக்க உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன . 477 ட்ரோன்கள் மற்றும் பல்வேறு வகையான 60 ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ரஷ்ய - ஈரானிய ஷாஹெட்கள். உக்ரைனில் உள்ள அனைத்தையும் ரஷ்யா குறிவைத்தது.

ஸ்மிலாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடமும் தாக்கப்பட்டது, இதில் ஒரு குழந்தை காயமடைந்தது. அவசர உதவிகள் தேவைப்படும் இடங்களில் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.துரதிர்ஷ்டவசமாக, இந்த தாக்குதலை முறியடிக்கும் போது, ​​எங்கள் எஃப்-16 விமானி மக்ஸிம் உஸ்டிமென்கோ உயிரிழந்தார். அவர் 7 வான்வழி ஏவுகணைகளை அழித்தார்.

அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். அவரது மரணத்தின் அனைத்து சூழ்நிலைகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். கடந்த வாரத்தில் மட்டும் 114-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 1,270-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 1,100 கிளைடு குண்டுகளை ரஷ்யா வீசியுள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் மோதல் குறித்து தொலைபேசியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, ரஷ்ய அதிபர் புடினுடன் அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரிலிருந்து ரஷ்யா பின்வாங்காது என ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ரஷ்ய வெளியுறவுத் துறை ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறியதாவது: ஈரானைச் சுற்றியுள்ள நிலைமை குறித்து, புடின் விவாதம் நடத்தினார். ஈரான் பிரச்னைகளை ராஜதந்திர வழிமுறைகள் மூலம் தீர்க்க வேண்டும். உக்ரைனில் ஏற்பட்ட மோதல் குறித்து, சண்டையை விரைவாக நிறுத்துவதற்கான தனது முயற்சியை டிரம்ப் வலியுறுத்தினார்.

உக்ரைனில் தனது இலக்குகளை அடையவும், மோதலுக்கான மூல காரணங்களை அகற்றவும் ரஷ்யா பாடுபடும். போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். டிரம்ப்-புடின் அழைப்பில் உக்ரைனுக்கு சில அமெரிக்க ஆயுத ஏற்றுமதிகளை நிறுத்துவது குறித்து விவாதிக்கப் படவில்லை என்றும் அவர் கூறினார்.
 

இதையும் படிங்க: 477 ட்ரோன்கள்.. 60 ஏவுகணைகள்.. கதிகலங்கிய உக்ரைன்.. கனவிலும் நினைக்காத பேரிடி கொடுத்த ரஷ்யா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share